Wednesday, 26 April 2017

Mullivaikkal Genocide 8th Year Remembrance-இன அழிப்பின் 8ஆம் ஆண்டு நினைவு தினம்


8ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் நினைவேந்தல் - பிரித்தானியா.

நாள்-18.05.2017 வியாழக்கிழமை
இடம்-Hide park,London W2 2UH
தொடங்கும் நேரம்-17:00

முள்ளிவாய்க்கால் மண்ணில் இறுதி யுத்தத்தின்போது காணாமல் போன, விசாரணைக்கென்று அழைத்துச்செல்லப்பட்ட 18,000 க்கு மேற்பட்ட அப்பாவி பொதுமக்களும் இறந்திருக்கலாம் அல்லது வெளி நாட்டிற்கு தப்பி சென்றிருக்கலாம் என்கின்றது இனவழிப்பு செய்த சிறிலங்கா தேசத்தின் ரணில், மைத்திரி அரசாங்கம்.
 
சர்வதேச நியமங்களுக்கும் சட்டத்திற்கும் மாறாக இடம் பெற்ற அநீதிகளை சர்வதேசம் கண்டு கொள்ளாது நழுவிச் செல்லாமல் இருக்க வேண்டுமானால் ஒன்று பட்ட எம் எழுச்சியுடனான அழுத்தம் உச்சமாக இருக்க வேண்டும்.

எங்கள்  மண்ணின் விடுதலைக்காகவும், இறுதிப்போரில் வதைக்கப்பட்ட, கொல்லப்பட்ட
எங்கள்  உறவுகளுக்காகவும் லண்டன் மாநகரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தன்று அணிதிரளுமாறு பிரித்தானியா தமிழர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.  

"தாயக விடுதலைக்காக தொடர்ச்சியாக குரல் கொடுப்போம்.
நீதி கிடைக்கும்வரை அயராது செயல்படுவோம்! 
சர்வதேசத்தை எம்பக்கம் திருப்புவோம்!"

Thursday, 23 March 2017

தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கத்துக்கு மேலும் இரண்டு ஆண்டு  கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இக்கால அவகாசத்தால் இலங்கை அரசு மகிழ்வடைந்துள்ளது. இம் மகிழ்வுக்குக் காரணம் இரண்டு வருட கால அவகாசத்தில் ஐக்கிய நாடுகள் பேரவையின் தீர்மானங்களை நிறைவு செய்துவிடுவோம்   என்பதர்க்கல்ல. மாறாக UN தீர்மானங்களை அமுல்படுத்துவதற்காக வழங்கப்பட்ட இக்கால அவகாசத்தை, அத்தீர்மானங்களை பெறுமதியற்றதாக, வலுவற்றதாக, தேவையற்றதாக மாற்றுவதற்குப் பெருந்துணை புரியும் என்பதாலேயாகும்.

UN மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத்தொடரில் வைத்து
இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்கப்படும்போது இணை அனுசரணை என்ற அடிப்படையில், வாக்கெடுப்பு என்பதும் கைவிடப்பட்டது.

எதுவாயினும் 2014 மற்றும் 2015ம் ஆண்டுகளில் இலங்கை விவகாரம் தொடர்பில் UN மனித உரிமைகள் பேரவையால் ஆராயப்பட்ட போது  இருந்த முனைப்பு, ஆர்வம், ஈடுபாடு என்பன 2017ம் ஆண்டில் இருக்கவில்லை என்பதை அவதானிக்க முடியும். காலம் செல்லச்செல்ல குறித்த விடயம் ஆர்வம் குறைந்தோ அல்லது மறக்கப்பட்டுபோவது வழமை, அந்த வழமை எங்கள் விடயத்திலும் நடந்துள்ளதென்பதே உண்மை.

இப்போது கால அவகாசம் குறித்துப் பேசுகின்றவர்களும் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் இதே கரிசனையோடு பேசுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. இரண்டு வருடங்களின் பின்னர் எந்த விடயம் முதன்மையாக இருக்கிறதோ அதன் பக்கமே உலகத்தின் பார்வை இருக்கும்.

இதனால்தான் "ஆறின கஞ்சி பழங்கஞ்சி" என்றொரு பழமொழி நம் தமிழ் மொழியில் வந்தது. எனினும் இவற்றை நம் அரசியல் தலைமை இம்மியும் சிந்திக்கவில்லை. அதற்கும் காரணம் உண்டு.

அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கும் தற்போதைய ஆட்சியாளர்களுக்கும் இடையில் மிக நெருக்கமான உறவு உண்டு. இதனடிப்படையில் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதில் கூட்டமைப்பின் தலைமை மிகவும் உறுதியாக, இறுக்கமாக நின்றது.நாங்கள் சொல்வது தான் தமிழ் மக்கள் சொல்வது, தமிழ் மக்கள் சொல்வதுதான் நாங்கள் சொல்வது என்றவாறு கூட்டமைப்பின் தலைமை கூறி வருகிறது.

ஆனால் கால அவகாசம் என்ற விடயத்தில், போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் கருத்தை கண்டறிந்து அதன்படியே UN மனித உரிமை ஆணையம் தீர்மானத்தை எடுத்திருக்க வேண்டும். குற்றம் இழைத்த தரப்பு கால அவகாசம் கேட்கிறது. அக் கால அவகாசத்தைக் கொடுப்பதா? இல்லையா? என்பதைத் தீர்மானிப்பதற்கு, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் அபிப்பிராயத்தைக் கேட்பது நீதியல்லவா?

இருந்தும் மனித உரிமைகள் பேரவை கூட ஈழத் தமிழ் மக்களின் விடயத்தில் ஏனோ தானோ என்று நடந்து வருகிறது என்பதே உண்மை.

எது எவ்வாறாயினும் போரினால் பாதிக்கப் பட்ட தமிழ் மக்களின் மனநிலையை அறியாமல் இலங்கை அரசுக்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்குவதென்பது, இதுதான் உலகம் என்ற மகா தத்துவத்தை உணர வைத்துள்ளது. அவ்வளவுதான். 

Friday, 3 March 2017

பிரித்தானியப் பிரதமர் திரேசா மேயிடம் மனு கையளிக்கப்பட்டது.

தமிழ் மக்களின் சமகால கோரிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபையிடம் முன்வைக்கும் முகமாக 6 அம்சக் கோரிக்கைகளுடன் கூடிய மனு ஒன்று  பிரித்தானியப் பிரதமர் திரேசா மேயிடம் கையளிக்கப்பட்டது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் பிரித்தானிய வாழ் தமிழர்களால் முன்னெடுத்து வரப்படும் காலவரையறையற்ற தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தின் 5 ஆவது நாளான நேற்றைய தினம் மேற்படி மனு கையளிக்கப்பட்டுள்ளது.


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 34ஆவது அமர்வு ஜெனிவாவில் நடைபெற்று வரும் நிலையில் இலங்கைக்கு ஐ.நா. மேலும் காலநீடிப்பு வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்தியும் தமிழ் மக்களின் சமகால கோரிகக்கைகளை முன்னிறுத்தியும் பிரித்தானியாவில் காலவரையறையற்ற மாபெரும் தொடர் உணவு தவிர்ப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றமை யாவரும் அறிந்ததே.


கடந்த 28ஆம் திகதி ஜெனிவாவில் ஐ.நா.வின் 34ஆவது அமர்வு ஆரம்பமான நிலையில் அதற்கு முதல் நாளான 27ஆம் திகதி முதல் வெஸ்மினிஸ்டர் நகரில் அமைந்துள்ள பிரித்தானிய பிரதமரின் வாசல்ஸ்தலத்திற்கு முன்பாக 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மேற்படி அகிம்சைவழிப் போராட்டம் நடைபெற்று வருகின்றது.


இந்நிலையிலேய தொடர் போராட்டத்தின் 5 ஆவது நாளான நேற்றைய தினம் (2.3.2017) 6 அம்சக் கோரிக்கைகளுடன் கூடிய மனுவை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர் இராசலிங்கம் திருக்குமரன் மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகள் அமைச்சர் மணிவண்ணன் பத்மநாதன் ஆகியோர் பிரத்தானிய பிரதமரின் வாசல்ஸ்தலத்தில் கையளித்துள்ளனர்.


Wednesday, 1 March 2017

PLEASE SUPPORT HUNGER STRIKE PROTEST - மாபெரும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம்

PLEASE SUPPORT HUNGER STRIKE PROTEST  DAY 4 -01/03/2017

Mega Fasting Protest in front of 10 Downing Street from Sunday (26.02.2017)

In support of our people protests in Tamil Eelam & demand the UN not to extend the time for Sri Lanka on implementation of resolution 30/1 and Justice, Peace and permanent solution (Tamil Eelam) for Tamils.

TGTE have organised a Mega Fasting Protest in front of 10 Downing Street during the 34th Session of UNHRC.

Location:
In front of 10 Downing Street,
London, UK, SW1A 2AA

Nearest Underground Station: Westminster
This hunger strike is Organised & Supported by TGTE & Other Organisations

Please pass this message to your friends and family
.

Sunday, 26 February 2017

UN மேலதிகமாக கால அவகாசம் வழங்கக் கூடாது, இலங்கை சர்வதேசத்தை ஏமாற்றுகிறது.

2015ம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதி புதிய ஜனாதிபதியாக மைத்ரிபால சிறிசேன ஆட்சி ஏறியதன்  பின்னர் நடைபெற்ற மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து கலப்பு முறையிலான விசாரணை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி அமெரிக்கா பிரேரணை கொண்டு வந்திருந்தது. இப்பிரேரணையானது   இலங்கை அரசாங்கத்தின் அனுசரணையுடன் நிறைவேறியிருந்தது. மேலும் புதிய அரசியல் அமைப்பின் ஊடாக தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்பட்டு அனைவரும் ஒற்றுமையுடன், இலங்கையர்கள் என்ற வகையில் சமாதானமாக வாழும் நிலை ஏற்படுத்தப்படும் என சர்வதேசத்திற்கு வாக்குறுதியும்  வழங்கப்பட்டது. எனினும் வாக்குறுதி வழங்கப்பட்டு 18 மாதங்கள் கடந்த நிலையில் அப்பரிந்துரைகள் அடங்கிய தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு மேலும் கால அவகாசம் தேவையாகவுள்ளது என்ற கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்வதற்காக அரசாங்கம் பலமுனைகளில் நடவடிக்கை எடுத்து வருகின்றது.


ஐ.நா.மனித உரிமை பேரவையினால் வழங்கப்பட்ட பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் முறையாக நடைமுறைப்படுத்தினால் மட்டுமே தமிழ் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.

சர்வதே குற்றவியல் நீதிமன்றம், ஐ.நா மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களின் கரிசனை தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு மிகவும் அவசியமாகும். இலங்கை அரசாங்கம் இதுவரையிலும் தமிழ் மக்களின் உரிமைக்காக காத்திரமான எந்த விடயங்களையும் செய்யவில்லை இந்தநிலையில்  காலநீடிப்பு வழங்குவது தமிழ் மக்களின் பாதுகாப்பை மேலும் கேள்விக்குறியாக்கிவிடும். இக் கால நீடிப்பின் நோக்கம் போர்குற்றங்களை மறக்கச்செய்யும் ஒரு தந்திரோபாயம் என்றே கருதவேண்டும்.

இதுவரைகாலமும் வழங்கப்பட்ட அவகாசத்தில் எவ்வித முன்னேற்றகரமான விடயங்களும் மேற்கொள்ளப்படவில்லை. இதன்மூலம் இலங்கை அரசாங்கத்திடம் முறையான அரசியல் திட்டம்  இல்லை என்பதுடம் தமிழ் மக்களை மீண்டும், மீண்டும் ஏமாற்றவே முயற்சிக்கிறது என்பது தெளிவாகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய தரப்பினர்கள் பலரும் ஐக்கிய நாடுகளினால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்த முடியாதெனவும், இந்த பரிந்துரைகளை ஏற்க மாட்டோம் எனவும், தாம் ஒருபோதும் தமிழருக்கு எதிரான போரில் ஈடுபட்ட எவரையும் காட்டிக்கொடுக்க மாட்டோம் என பொதுமக்கள் மத்தியில் பகிரங்கமாக தெரிவித்திருந்தனர்.

இந்தநிலையில், எத்தனை காலநீடிப்பு இலங்கைக்கு வழங்கினாலும் தமிழ் மக்களுக்கு எந்தவித முன்னேற்றமும் ஏற்படப்போவதில்லை, மாறாக மேலதிகமாக கால அவகாசம் தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர ஊக்கம் அழிப்பதாக அமைந்துவிடும். போர் முடிந்து எட்டு வருடங்ள் ஆகியும் இன்றும் தமிழ் மக்கள் பல்லாயிரம் மக்களை கொன்று, பாலியல் வன்முறையில் ஈடுபட்ட வெறி பிடித்த சிங்கள ராணுவத்தின் மத்தியில் அச்சத்துடன் வாழ்கின்றனர். காணமல் போதல்,கப்பம் பெறுதல், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இன்றும் தொடர்கிறது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்டத்தொடர் நாளை  திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

Friday, 10 February 2017

தமிழக மக்கள் ஏன் இவ்வளவு அப்பாவியாக இருக்கிறார்கள்?

சசிகலாவை ஆயம்மா, வேலைக்காரி என கிண்டல் செய்வதைப் போன்ற  ஒரு  குருட்டுத்தனம் வேறு இருக்க முடியுமா? ஜெயலலிதாவே  சசிகலாவை 
தனது உடன்பிறவா சகோதரி எனக்குறிப்பிட்டதை அறியாதவர்களா? சசிகலா தனது உயிர்தோழி என தன்பக்கத்திலேயே வைதிருந்தாரே அதை  மறந்துவிட்டனரா?? இதையும்தாண்டி எந்த ஆயம்மாவாவது  சாராய ஆலை வைத்திருக்கிறாரா? எந்த வேலைக்காரி ஜாஸ் தியேட்டர் வாங்கியிருக்கிறார்?? பாத்திரம் தேய்க்கின்றவரால் பையனூர் பங்களாவை பறிக்க  முடியுமா??? இந்த  கங்கை அமரன் தனது பையனூர் பங்களாவை சசிதான் பிடிங்கினார் என பத்திரிகையாளர் சந்திப்பில் பேட்டி கொடுக்கிறாரே, ஏன் இந்த அமரன்  சம்பந்தமே இல்லாத ஜெயலலிதாவிடம் நியாயம் கேட்டிருக்க வேண்டியதுதானே? முட்யுமா? முடியாது! ஏனெனில் பிடிங்கியது  இருவருமாக சேர்ந்துதான். நாலாயிரம் கோடி தங்கம் .டிரான்சி நில ஊழல் இன்னும் எத்தனையோ   இதில் எங்கே ஜெ முதலாளியானார், சசி வேலைக்காரி ஆனார்? கொஞ்சமாவது லாஜிக் வேண்டாமா?

உண்மையில் இந்த இரு முதலாளிகளுக்கும் வேலைக்காரர்களாக இருந்தது பதவிக்காக டயர் வரை கூழைக் கும்பிடு போட்டு, காலால் இட்ட பணியை
தலையால் செய்துமுடித்த ஓ.பி.எஸ் போன்றவர்கள் தான். ஜெ செத்து இத்தனை நாட்கள் ஆனபின் அவருக்கு ஞானம் வருகிறதாம். தனது முதல்வர் பதவி பிடுங்கப்பட்டவுடன், சசிக்கு மக்களிடையே எதிர்ப்பு உள்ளது என நன்றாக தெரிந்தவுடன் இவரிடம் ஜெ ஆன்மா பேசுகிறதாம், உந்துகிறதாம், உருளுதாம், உடையுதாம்! இன்னும் தெளிவாகச் சொன்னப்போனால் தன் இரு முதலாளிகளில் பலமான முதலாளியின் இடம் காணாமல் போனவுடன் சொத்தை ஆட்டையைப் போட நினைக்கும் வேலையாளின் சுயநலன் தான் ஓ.பி.எஸ்க்கு இருக்கிறதே தவிர, அதில் கட்சி நலன், அரசு நலன், மக்கள் நலன் இருக்கிறது என நினைப்பது மகா அரசியல் அறிவீனம்.

மக்கள் எதிர்பார்க்க வேண்டியதும், கேட்க வேண்டியதும், குரல் எழுப்ப வேண்டியதும் சசியா, ஓ.பி.எஸ்சா என்பதற்காக அல்ல. இருவரும் மோதகமும், கொழுக்கட்டையும்தான்  உள்ளே உள்ளது எல்லாம் ஒன்றுதான்? கேட்க வேண்டியதும், குரல் எழுப்ப வேண்டியதும் "பொதுத்தேர்தல்" லுக்காக மட்டுமே இதுவே  தற்போதைய நெருக்கடிக்கு தீர்வாக அமையலாம் .

இளைஞர்களே தயாராகுங்கள் தமிழ்நாட்டை நல்வழி நடத்தி செல்வதற்கு...

Saturday, 4 February 2017

சுதந்திர தினம் துக்கதினமாக அனுஷ்டிப்பு.

இன்று  04 ஆம் திகதி இலங்கை தனது 69 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது, அனால் இலங்கையில் உள்ள அனைத்து இனமக்களும் சுதந்திரத்தை அனுபவிக்காத நிலையிலேயே இன்றைய சுதந்திரதினமும் கொண்டாடப்படுகிறது. அதாவது ஈழத்தமிழர்களின் உரிமையும் சுதந்திரமும் பறிக்கப்பட்ட கறுப்பு நாளாகவே இது கருதப்பட்டு  வருகிறது .

நாடு சுதந்திரம் அடைந்து 69 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது ஆனால் இலங்கையில் வாழும் இரு பிரதான இனங்களாக கருதப்படும் தமிழ், சிங்கள மக்கள்  ஒன்றுமையுடன் சுதந்திர தினத்தை கொண்டாடும் நிலையை  இதுவரை எந்த அரசும் ஏற்படுத்தவில்லை என்பதை இன்றைய நிரூபித்துள்ளன.ஆட்சிப்பீடம் ஏறிய சிங்கள பௌத்த பேரினவாத அரசுகள் அனைத்தும் ஒரே பேரினவாத கொள்கையை பின்பற்றி 1948 ஆம் ஆண்டு முதல் பல இலட்சம் அப்பாவி தமிழர்களை கொன்றது. மீதமுள்ள மக்களின் வாழ்விடங்கள், வாழ்வாதாரங்களை அழித்து சொந்த மண்ணிலேயே அகதிகளாக இன்றும் அலைய விட்டுள்ளது. இன்று இலங்கைத்தீவில் ஆட்சி மற்றம் ஏற்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்து நல்லாட்சி நடக்கிறது என சர்வதேசத்திற்கு காட்டிக்கொண்டலும் தமிழர்களுக்கு எந்தவித தீர்வையோ, நீதியையோ வழங்கபோவதில்லை. முன்னைய அரசுகளைப் போலவே பௌத்த தர்மத்தை பின்பற்றி எந்தவித தீர்வையும் முன்வைக்காது தமது ஆட்ச்சிக் காலத்தை வெற்றிகரமாக இவ்வரசும் கடந்து செல்லும்.

சுதந்திர தின நிகழ்வுகள் நடைப்பெற்று வரும் நிலையில் முல்லைத்தீவு வர்த்தகர்கள் கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


கேப்பாப்புலவு மக்கள் தமக்கு சொந்தமான காணிகளில் இருந்து இராணுவத்தை வெளியேற்றி எம்மிடம் மீள கையளிக்குமாறு போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.
மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் தேசிய சுதந்திர தினத்தை தமிழ்தேசிய இனத்தின் துக்க தினமாக அறிவிக்க கோரியும், காணாமல் போன 20 ஆயிரம் பேருக்கு அரசே பதில் சொல், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய், இராணுவம் ஆக்கிரமித்துள்ள நிலங்களை விடுதலை செய், புதிய நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதை தடுத்து நிறுத்து, இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களுக்கான நீதி விராணையை சர்வதேச நீதிபதிகளிடம் ஒப்படை, இனப்பிரச்சினைக்கு சர்வதேச மத்தியஸ்த்ததுடன் தீர்வினை காண், என்ற 6 கோரிக்கைகளை முன்வைத்து இந்த கவனயீர்ப்பு போராட்டம் கறுப்பு பட்டி அணிந்து நடைபெற்று வருகின்றது.

மன்னாரில் மேற்கொள்ளப்படவிருந்த கறுப்புக் கொடிப் போராட்டத்திற்கு மன்னார் நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை தடை உத்தரவை பிறப்பித்திருந்தது. எனினும் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த போராட்டத்திற்கு மன்னார் நீதிமன்றம் தடை கட்டளை பிறப்பித்துள்ள போதும் சட்டத்தை மீறாத வகையில் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளதாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் சுதந்திர தினத்தை அனைத்து இலங்கையரும் கொண்டாட வரும்படி லண்டனில் உள்ள இலங்கை தூதரகம் அழைப்பு விடுத்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று லண்டன் தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இராணுவமே வடக்கை விட்டு வெளியேறு , அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரியும், இலங்கையின் சுதந்திரதின நிகழ்வானது தமிழர்களுக்கான சுதந்திரமல்ல என விடுதலைப்புலிகளின் கொடியினை ஏந்தியவாறு போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

இவ்வாறு தமிழ் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு  அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காது  இன்றுவரை இலங்கையின் சுதந்திரதினம் கொண்டாடப்பட்டு வருகிறதென்பதே உண்மை.

Thursday, 26 January 2017

அவர்கள் உயிரோடுள்ளார்களா? ARE THEY ALIVE?

இறுதி யுத்தத்தின்போது சரணடைந்தவர்கள், யுத்தத்திற்கு பிறகு
விசாரணைகளுக்காக அழைத்துச்செல்லப்பட்டவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என காணாமல் போனவர்களின் பெயர் பட்டியல் நீண்டுகொண்டே போகின்றது. இவ்வாறு காணாமல் போன தமது உறவுகளை விடுதலை செய்யுமாறு கூறி வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட சாகும் வரையான உண்ணாவிரதப்போராட்டத்தில் வவுனியா, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களில் இருந்து ஏராளமான மக்கள் வருகைத்தந்து சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

சிறிலங்கா அரசினால் கைது செய்யப்பட்ட அல்லது சரணடைந்து காணாமல் போன பல்லாயிரக்கணக்கானவர்களின் விபரங்களைக் கோரி வவுனியாவில் சாகும்வரை உண்ணாவிரதமிருக்கும் உறவுகளின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கும்வகையில்  அமைதி ஆர்ப்பாட்டமொன்றை பிரித்தானிய தமிழர் பேரவை ஒழுங்கு செய்துள்ளது. உறவுகளை இழந்து தவிக்கும் நம் உறவுகளின் கோரிக்கைக்கு நாமும் ஆதரவைத் தெரிவிபோம்.என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டம் இடம் பெறும் இடம்:
No 10 Downing street,
Westminster, London SW1A 2AA

நேரம் : 2.00PM - 5.00PM
திகதி : Sunday 29/01/2017
Nearest underground station: Westminster

தொடர்புகளுக்கு : 07766832754, 07508365678, 07939325486, 07814486087, 07734397383


A demonstration has been organized to support of the victims who were arrested and surrendered to the Sri Lankan security forces and disappeared during the last phases of the war. As the Genocidal Sri Lankan State refused to release their names and whereabouts, their relatives are on hunger strike in Vavuniya, Sri Lanka.

Please join to show your solidarity.

Venue: 10 Downing street,
Westminster, London SW1A 2AA

Time: 2.00PM - 5.00PM

Date: Sunday 29/01/2017

Nearest underground station: Westminster
Contact: 07766832754, 07508365678, 07939325486, 07814486087, 07734397383
 Related
Tamil Diaspora lobbies against GSP plus

Wednesday, 7 December 2016

ஜெயலலிதாவின் அரசியல்என் இனம் அழிக்கப்பட்ட போது, யுத்தம் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள், அதைத் தவிர்க்க முடியாது...! சிங்களவன் நடத்திய தமிழ் இனவழிப்பிற்கு ஆதரவாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அன்றைய கொள்கை....!

MGR முதல்வராக இருந்த போது தேவையற்ற கதைகளை குறைத்து செயல்லளவில் பலவற்றை தமிழர்களுக்காக செய்தார் மற்றைய யாவரும் அரசியல் பேச்சு ஆணால் காரியத்தால் ZERO அம்மா உண்மையில் அக்கறை உள்ளவ என்றால் எப்பவோ இந்தியாவில் தஞ்சமடைந்தவர்களை கவனித்திருப்பா ஏன் சமீபத்தில் Indonesia கடலின் கரையை ஒதுங்கிய அகதி வள்ளம் ஏன் இந்தியாவை விட்டு செல்ல வேண்டும்? அங்கே ஒதுங்கிய போது மக்கள் விரத்தியில் எங்களை கொல்லுங்கள் நாங்கள் எனியும் வாழ்வதில் அர்தமில்லை என்ற நோக்கோடு Indonesia படையினருடன் முன் நேக்கி அவர்களது கட்டுப்பாட்டையும் மீறி படகில் இருந்து தரையில் குதித்தார்கள் இவை மாத்திரமல்ல விரக்தி அடைந்த இன்னும் ஒருவர் அகதி முகாமுக்கு வெளியேயுள்ள மின் கம்பத்தின் மேல் ஏறி தற்கொலை புரிந்து கொண்டார் அம்மா உண்மையிலே அக்கறை உள்ளவராயின் இவை யாவும் நடந்திருக்காது அங்கே மனித தன்மைகள் நடைமுறையாக இல்லாத காரணத்தால் இந்த மக்கள் இப்படி ஒரு நிலைக்கு தள்ளப்பட்டு இருந்தார்கள். அம்மாவின் அரசியல் காற்று வீசுவது போல் பல திசைகளில் நிதானம் இல்லாது மாறு பட்ட கருத்துகளுடன் இருக்கும் அரசியல் பேச்சு.

 

Saturday, 3 December 2016

துறவு வேசத்தில் ஒரு இனவாதி

நாட்டில் அரங்கேற்றப்படும் மதகுருக்களின் அட்டகாசங்களும் நல்லாட்சியின் அரசியல் தந்திரோபாயம் என்பதில் சந்தேகம் இல்லை. பொதுபலசேனா போன்ற அமைப்புகளுடன் இணைந்தும் இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் பல அரங்கேற்றப்படுகின்றன. இந்த நாடகங்கள் இனிவரும் காலங்களில் இன்னும் அதிகரிக்கப்படும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. போலி தீர்வொன்றை தமிழ் மக்களுக்கு திணித்து சர்வதேசத்தின் கண்களில் இருந்து தப்பிப்பதற்கு முன்னரே போடப்பட்ட அட்டவணைப்படி அரங்கேற்றப்படுகிறது.

உண்மையில் அவர்கள் புத்த பிக்குகளே அல்ல. புத்தனின் போதனையைப் பின்பற்றும் ஒரு பெளத்த துறவி மண்ணுயிர் எதற்கும் தீங்கு செய்யார். ஆனால் இவர்கள் அவ்வாறனவர்கள் அல்ல. இவையெல்லாம் மத போதனைக்கு எதிரானவை. புத்த பிக்கு ஒருவர் பொது பல சேனா என்ற அமைப்புக்கு பொதுச் செயலாளராக இருப்பதே புத்தனின் போதனைக்கு  எதிரானது. இத்தகையவர்களை புத்த பிக்குகள் என்று யாரும் பார்த்துவிடக்கூடாது.

இவர்கள் துறவு வேசத்தில் சகல சுகபோகங்களையும்  அனுபவித்துக்கொண்டு மக்களை துன்புறுத்தும் ஒரு கேடுகெட்ட அரசியல்வாதி ஆகையால் வெளித் தோற்றத்தை வைத்துக் கொண்டு இவர்களை பெளத்த துறவி என முடிவு செய்து விடாதீர்கள்.


Sunday, 27 November 2016

ஒலிம்பிக் பார்க்கில் மாவீரர் தின நிகழ்வுகள்


லண்டனில் உள்ள எக்ஸெல் மண்டபத்திற்கு அருகாமையில், உள்ள ஒலிம்பிக் பார்க்கில் மாவீரர் தின நிகழ்வுகள் நடந்து கொண்டு இருக்கிறது. கடும் குளிரையும் பொருட்படுத்தாது மக்கள் இதில் கலந்துகொண்டு தமது வீர வணக்கத்தை மாவீரர்களுக்கு

செலுத்தி வருகிறார்கள். இம்முறை கடல் புலிகளை நினைவுகூரும் வண்ணம் , அருகில் உள்ள ஆற்றில் படகில் கடல் புலிகளின் கப்பல் போல ஒரு படகு வடிவமைக்கப்பட்டு , அதிலும் ஈகைச் சுடர் ஏற்றப்பட்டுள்ளது.


தமிழரின் நீதியான கோரிக்கைகள் எப்போது கிடைக்கும்?

இலங்கையில் உள்நாட்டு போர் பல வருடங்களாக நிகழ்ந்த நிலையில் 2000ம்
ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் சமாதான பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியது.ஆனால் குறித்த சமாதான பேச்சானது 2006ம் ஆண்டளவில் மெல்ல மெல்ல முறிவடைந்தது. இந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் 2006ம் ஆண்டு தனது மாவீரர் தின உரையில் தமிழ் மக்களின் அடிப்படைப்பிரச்சினைகள் தொடர்பாக சில முக்கிய கேள்விகளை கேட்டிருந்தார் .அதற்க்கான ஆக்க பூர்வமான எந்த பதிலும் பத்து ஆண்டுகள் கடந்தும் வழங்கப்படவில்லை.மைத்திரி அரசும் பதவியேற்று இரண்டு ஆண்டுகளை எட்டவுள்ளது.


''போருக்கு ஓய்வு கொடுத்து, சமாதான வழியிற் சமரசப் பேச்சுக்கள்வாயிலாக எமது மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண நாம் நேர்மையுடனும் நெஞ்சுறுதியுடனும் முயற்சித்து ஆறு ஆண்டுகள் அசைந்தோடி விட்டன.
நாம்அமைதி காத்த இந்த ஆறு ஆண்டு காலத்தில் இந்த நீண்ட கால விரிப்பில் தணியாதநெருப்பாக எரிந்து கொண்டிருக்கும் தமிழரின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டதா? தமிழரைச் சதா கொடுமைப்படுத்திக் கொன்றொழித்து வரும் சிங்கள ஆட்சியாளர்களின் மனவுலகில் மாற்றம் நிகழ்ந்ததா? தமிழரின் நீதியான நியாயமான கோரிக்கைகள் எவையும் நிறைவேற்றப்பட்டனவா?
ஆக்கிரமிப்பு இராணுவத்தின் அடாவடித்தனங்களால் நாள்தோறும் அவலத்திற்கும், இம்சைக்கும் ஆளாகி நிற்கும் எம்மக்களுக்கு நிம்மதி கிடைத்ததா? எம்மக்களை நாளாந்தம் அழுத்தி வரும் அன்றாட அவசியப் பிரச்சினைகள் தானும் தீர்த்து வைக்கப்பட்டனவா? எதுவுமே நடக்கவில்லை மாறாக  எத்தனையோ கனவுகளோடு ,  எத்தனையோ கற்பனைகளோடு நீதி கிடைக்கும் என காத்திருந்த தமிழருக்கு சாவும் அழிவுமே பரிசாக கிடைத்திருக்கின்றன     சோதனைமேல் சோதனையாக, வேதனைமேல் வேதனையாகத் தாங்க முடியாத துயரச்சுமை தமிழர் மீது சுமத்தப்பட்டிருக்கிறது. இந்த வேதனையால் அழுதழுது கண்ணீர் தீர்ந்து, இரத்தமே கண்ணீராக வருகின்ற சோகம் தமிழினத்திற்கு ஏற்பட்டிருக்கிறது''.

குறித்த கேள்விகள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் தனது மாவீரர்தின உரையில் குறிப்பிட்டிருந்தார். அதாவது அரசானது நேர்மையாக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சனையைகூட  தீர்த்துக்கொள்ள முன்வரவில்லையெனில், எப்படி இந்த அரசு நியாயமான அரசியல் தீர்வினை முன்வைக்கும்? என்பதேயாகும்.அதற்கான பதிலை  இலங்கையின் இனவெறி பிடித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் அவரின் சகோதரர்களும் சர்வதேசத்தின் ஆதரவுடன் நடத்திய கொடூர யுத்தத்தின் மூலம் பல்லாயிரம் மக்களை கொண்று குவித்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் கூற்றை உறுதி செய்திருந்தனர்.


இன்று நாட்டின்  ஜனாதிபதி மாறியுள்ளார் என்று மட்டும் சொல்லலாம்
ஆனால் நம் தமிழ் இனத்திற்கு எந்த முன்னேற்றமும் ஏற்படபோவதில்லை என்பது  உறுதி, ஏனெனில் இன்றைய ஜனாதிபதி மைத்திரி தான் தமிழ் மக்கள் அதிகமாக படுகொலை செய்யப்பட்ட காலத்தில் மஹிந்த ராஜபக்சவின் அரசின் பாதுகாப்பு அமைச்சராக இருந்தார். அதேபோல இன்றைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க பேச்சு வார்த்தை என்ற பெயரில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை பிளவுபடுத்தியவர். இவர்களால்  தமிழ் இனத்திற்கு விடிவு கிடைக்குமா???Sunday, 13 November 2016

பெண் பொலிசார் ஒருவரை கலைத்துக் கலைத்து தாக்க முற்படும் விகாராதிபதி

மட்டக்களப்பில் நடு வீதியில் வைத்து கிராம சேவையாளருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்து அவரை கடும் போக்கான வார்த்தைகளையும் பிரயோகித்து தகாத வார்த்தைகளால் திட்டிய மங்களராமய விகாராதிபதி அண்மையில் பொலிஸ் அதிகாரி மற்றும் பொலிசார் பலர் முன்னிலையில் பெண் பொலிசார் ஒருவரை கலைத்துக் கலைத்து தாக்க முற்படும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

இன்றைய தினமும் பிக்கு விகாராதிபதியாக உள்ள விகாரைக்கு விசாரணை நடத்தச் சென்ற பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர் மீது அவதூறான வார்த்தைகளையும் கூறி திட்டியதோடு அவரை தாக்க முயன்றார்.

இங்கு அவரை தடுக்க பொலிஸார் தமது அதிகாரத்தை பிரயோகிக்கவோ, அல்லது முறையான கட்டுப்படுத்தலையோ மேற்கொள்ளவில்லை, ஏனெனில் அவர் ஒரு சிங்கள மதகுரு. பொலிஸ்அதிகாரங்கள்,நீதிமன்ற கட்டளைகள் ,சட்டங்கள் அப்பாவி தமிழரை நோக்கி பல மடங்கு வீரியத்துடன் பாயும் அனால் பெரும்பான்மை இனத்தவரை அல்ல.


11ம் திகதி சட்டவிரோத காணி அபகரிப்பைத் தடுக்கச்சென்ற பட்டிப்பளை பிரதேச செயலக குழுவினரை மிக்க கடுமையான இனவாத வார்த்தைகளால் திட்டியுள்ள மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமன ரத்தின தேரர் தமிழர்கள் அனைவரையும் கடுமையாக எச்சரித்து திட்டிய வார்த்தைகள்.Saturday, 12 November 2016

இனவாதத்தை கக்கும் விகாராதிபதி All Tamils ​​are Tigers,Racism Priest

நல்லாட்சி  நடைபெறுகிறது என சர்வதேச மட்டத்தில் இலங்கை நற்பெயரை பெற்றுக் கொள்ள மட்டும் முயன்றால் போதாது, அது நடைமுறையில் சாத்தியப்படவேண்டும், அப்போதே நாடும் சரி மக்களும் சரி நிம்மதி பெற முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை.

மதக் கருத்துகளை போதிக்க வேண்டிய,அமைதி வழியை பின்பற்ற வேண்டிய  மதப்போதகர்களே  கடும் போக்காளர்களாக  மாறினால் அவரை பின் தொடரும் மக்கள் எவ்வாறான போக்கை கொண்டிருப்பார் என்பது எவருக்கும் சொல்லித் தெரியவேண்டியது இல்லை.

நேற்றைய தினம்  ஓர் பௌத்த பிக்கு நூற்றுக்கணக்கானவர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்க்க, அவர் தமிழர்கள் மீதும், மக்கள் மத்தியில் மதிக்கத்தக்க அரசாங்க பதவியை வகிக்கும் கிராம சேவையாளர் ஒருவர் மீதும் பிரயோகித்த வார்த்தைகள் மிகவும் கீழ்த்தரமாக அமைந்தன. நீதிமன்றத்திற்கு முன்னிலையில் பிக்குவின் வாயில் இருந்து வந்த கீழ்த்தரமான, இனவாத வார்த்தை பிரயோகங்கள்  ஒழுக்க விதிமுறைகளை கட்டுப்படுத்த வேண்டிய பொலிஸாரினாலும்  வேடிக்கை பார்க்கப்பட்டதே தவிர  கட்டுப்படுத்தப்பட வில்லை என்பது மிகவும் மனவருத்தம் தரக்கூடியது. மேலும்  இவ்வாறு பொது மக்களின் முன்னிலையில் அவ்வுத்தியோகத்தர் அவமானப்படுத்தப்பட்டதற்கும், அதனை மற்றவர் வேடிக்கை பார்க்கும் நிலைக்கும்  முக்கிய காரணம் அவர் தமிழர் என்பதேயாகும் .

கடுமையான சட்டங்கள் மூலம் இனவாதம் முற்றாக நாட்டை விட்டு விரட்டப்பட்டு, விஷக்கிருமிகளை நசுக்கபடாவிட்டால், அரசு அபிவிருத்தியும் நல்லிணக்கமும் நிறைந்த நாடு என சர்வதேசத்திற்கு நிறுவுவது மட்டும் எட்டாக்கனியாகவே அமையும்.  ஆட்சி மாற்றம், வாக்குறுதிகள் மட்டும் கொடுத்துக்கொண்டு வரப்படுமாயின், எத்தனை ஆட்சியும் தலைமைகளும் வந்தாலும் ஒற்றுமை என்பது இலங்கையை பொறுத்த வரை சாத்தியமில்லாததொன்றே.
ஒரு தரப்பை தூண்டிவிட்டு மற்றுமோர் தரப்பிற்கு எச்சரிக்கைகளையும், கட்டளைகளையும் பிறப்பித்து வரும்போது பாதிக்கப்படுவது ஒரு இனம் அல்ல  முழு நாடும் என்பதே நிச்சயம்.

நேற்றைய  தினம்11ம் திகதி
சட்டவிரோத காணி அபகரிப்பைத் தடுக்கச்சென்ற பட்டிப்பளை பிரதேச செயலக குழுவினரை மிக்க கடுமையான இனவாத வார்த்தைகளால் திட்டியுள்ள மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமன ரத்தின தேரர் தமிழர்கள் அனைவரையும் கடுமையாக எச்சரித்து திட்டிய வார்த்தைகள்.


Thursday, 10 November 2016

தமிழர்களை சத்தமில்லாமல் அழிக்கும் புதிய அரசு

ஆயுதப் போராட்டம் இடம்பெற்ற காலங்களில் வட பகுதியில் இல்லாத பல சமூக விரோத செயல்கள் இன்று விஸ்வரூபம் எடுத்துள்ளது குறிப்பாக போதைப் பொருள் பாவனை,விபச்சாரம் போன்றவற்றின் கேந்திர நிலையமாக உருவாகியிருப்பது குறித்து கவலை கொள்ளாதவர் எவரும் இருக்க முடியாது ,இன்றைய நிலைக்கு முற்று முழுதாக இலங்கை அரசுதான் காரணம் என்பதற்கு மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இவ் அழிவில் இருந்து எதிர்கால சந்ததியை காக்க  தமிழ் மக்களும், தமிழர் அரசியல் தரப்பும் உணர்ந்து செயற்பட  வேண்டும்.

வடக்கில் இன்றும் 1 இலட்சத்து 50 ஆயிரம் சிங்கள இராணுவம் கடமையில்
ஈடுபட்டுள்ளதுடன், அவர்களுக்கு மேலதிகமாக கடற்படை, விமானப்படை மற்றும் வலம் வரும் நிலையில், கடல் வழியாக கஞ்சா வட பகுதிக்கு எவ்வாறு எடுத்து வரப்படுகின்றது என வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.மேலும் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை கரையேற்றுவது எவ்வாறு என விழித்துக் கொண்டிருக்கும் வேளைகளில் வாள்வீச்சு, போதைப் பொருள் பாவனை மக்களிடையே அதிகளவில் பரவிவருவது மிகுந்த குழப்பத்தை உண்டுபண்ணுவதாக அமைந்துள்ளது.

வட பகுதியில் தொடர்ந்தும் காணப்படும் இறுக்கமான பாதுகாப்பு அரணையும் தாண்டிப் போதைப் பொருட்கள் எடுத்துவரப்படுகின்றது எனின் இதில் சிங்கள அரசின் சதித்திட்டம் உள்ளடங்கி இருப்பதை எவரும் இலகுவாக விளங்கிக்கொள்ள முடியும். தமிழ் பிரதேசத்தை மையப்படுத்தி மேற்கொள்ளப்படும் இந்நடவடிக்கை அடுத்த தலைமுறையை சுயசிந்தனை இல்லாத, ஆற்றலற்ற, விடுதலை உணர்வில்லாத ஒருதலைமுறையாக உருவாக்குவதையே சிங்கள அரசு செய்து கொண்டிருக்கிறது.

போர் நடைபெற்ற காலத்தில்கூட போதைப் பொருள் பாவனையோ,கலாச்சார சீரழிவோ இருந்ததில்லை.பலம் பொருந்திய புலிகளை அழித்தவர்களுக்கு இந்த சிறிய விடையத்தை தடுத்து நிறுத்தத்  தெரியாமல் இல்லை. முதலமைச்சர் விக்னேஸ்வரன் சொல்வதைப் போன்று வடக்கில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான இராணுவத்தினர் கடமையில் இருந்தும் இவ்வளவு போதைபோருளும் , வாள் வெட்டுக் குழுக்களும் எங்கிருந்து வருகின்றன? எவ்வாறு செயற்படுகின்றன என்பது குறித்து சிந்திப்பது அவ்வளவு பெரிய விடையமல்ல.

இலங்கை அரசாங்கம் எதை நினைக்கிறதோ அதையே திட்டமிட்ட வகையில் செயற்படுத்திவருகின்றது.மூன்று சாகப்தங்களாகபோரினால் பாதிக்கப்பட்டு எமது உயிர்களையும் சொத்துக்களையும் எதிர்கால வாழ்வினையும்தொலைத்துவிட்டு, அந்தச் சரிவில் இருந்து மெதுவாக எழுந்து நிற்க முன்னர், வடக்கில் இன்று நிகழ்த்தப்படும் திட்டமிட்ட இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளால் நெஞ்சம் நெக்குருகிப்போகின்றது. உண்மையில் சிங்கள அரசின் உண்மையான நோக்கம் ஒன்றே ஒன்று தான். தமிழ் மக்களை எப்பாடுபட்டேனும் அடக்கிவிடவேண்டும். அவர்களின் அடுத்த தலைமுறையினர் திசை மாறிச் செல்ல வேண்டும். அவர்களும் சுயநிர்ணயம், சுயாட்சி, அதிகாரம், தீர்வு என்று உரிமைக் குரல் எழுப்பக் கூடாது.

இதை இன்றைய அரசாங்கம்மட்டுமல்ல, ஆட்சிப் பீடம் ஏறிய அத்தனை அரசாங்கங்களும், ஆட்சியாளர்களும் செய்துதான். இது மைத்திரி. ரணில் அரசாங்கத்தின் புதிய உத்தியல்ல. முன்னைய அரசாங்கங்கள் பள்ளிக்கூடங்கள், ஏனைய கல்வி நிறுவனங்களை அழித்தன. இன்றைய அரசாங்கமும்  மாணவர்களையும், இளைஞர்களையும் அழிக்க, சிதைக்க தலைப்பட்டு இருக்கிறது.

இலங்கையில் மகிந்த ஆட்சியை ஒழித்து, மைத்திரி ஆட்சியைக் கொண்டு வருவதற்கு வேண்டுமானால் தமிழ் மக்கள்உதவிபுரிந்திருக்கலாம். அதற்கு நன்றி விசுவாசமாக இவர்கள் தமிழ் மக்களுக்கு அதிகாரங்களை வழங்க முயற்சிப்பார்கள் என்று எதிர் பார்ப்பது அடி முட்டாள்த்தனமே.

சர்வதேச அழுத்தங்களை இலங்கை அரசாங்கங்கள் சமாளிக்கவே முயற்சிக்கின்றது. இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழர்களுக்கு சுதந்திரம், ஒரு தடை அல்ல எனக்  காட்டிக்கொள்ளும் அரசு, அந்தஇடைவெளியிலும் தமிழர்கள் நிதான நிலைக்கு வரக்கூடாது என்பதில் விடாப்பிடியாகஇருக்கிறது. இன்றைய ஜனாதிபதி எளிமையானவராக தெரியலாம். அவர், சாதாரணமானவர்களைப் போன்று செயற்படலாம். ஆனால் அவரும் முன்னைய அரசாங்கங்களின் தலைவர்களைப் போன்ற மனநிலையை கொண்டவரே. உண்மையில் இவ் அரசாங்கமானது  தமிழர்களை இன்னொரு விதத்தில் அழித்துக்கொண்டுவருகின்றது. அது சத்தமில்லாமல்  நடத்தப்படுகின்றது.

தமிழரையும் ,தமிழரது நிலம், கலாச்சாரங்களையும் அடக்கி , அழிக்க கங்கணம் கட்டி நிற்கும்  தீய சக்திகளிடம் இருந்து   நமது தமிழீழ தாயக பூமியானது காக்கப்பட வேண்டும். இன்றைய நிலையில் சர்வதேச அமைப்புகளுக்கு முறையான அழுத்தங்களை கொடுப்பதே சிறந்த வழியாகவுள்ளது. மேலும் தாயகத்தில் உள்ள தமிழ் தமிழ்த்தலைமைகள் பதவி  மோகத்தில் மௌனமாக இருக்காது  எதிர்கால சந்ததியை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும், இல்லையேல் இவர்களை எதிர்காலம் ஒருபோதும் மன்னிக்காது..

we love hindus

Monday, 3 October 2016

அடுத்தவர் செய்தால் அது துரோகம், நாங்கள் செய்தால் அது தந்திரோபாயம்.

1948 இன்  பின்னர் இலங்கையின் அரசியலில்  எதுவித மாற்றமுமின்றி “இனவாதம்” என்ற மையப் புள்ளியைச் சுற்றி சுழன்று கொண்டிருக்கிறது. அதே கட்சிகள். அதே வாரிசுகள். அதே கோரிக்கைகள். அதே சுலோகங்கள். ஆனால்  கடந்த அரசாங்கங்களைப் போலவே தற்போதை அரசாங்கமும் செயற்படுகிறது. இன்னமும் யுத்த பாதிப்பு தொடருகிறது. பெண்களுக்கு எதிரான வன்முறைகள், போதைப் பொருள் பாவனை, கைதுகள், துன்புறுத்தல்கள், கொலைகள்  குறையவில்லை. நீதிமன்ற ஆணைகளையும் மீறி அடக்குமுறைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது. அதில் எமது  மக்கள் பிரதிநிதிகளோ தமது பதவிகளை தக்கவைத்துக்கொள்ள  மிகவும் புத்திசாலிகளாகவும் , துணிச்சல் படைத்தவர்களாகவும், விடாமுயற்சி உடையவர்களாகவும் விளங்குகின்றனர்.

வட கிழக்கு ஒரே பிரதேசம் என்கிறார்கள். மொழி மக்களை இணைக்கும் என்கிறார்கள். ஆனால் இரணைமடுவில் இருந்து  நீரை யாழ்ப்பாணம் கொண்டு வருவதற்கு இவர்களே தடையாக உள்ளனர். கிழக்கில் சம்பூர் அனல் மின்சார திட்டத்தை ஆதரித்து அவ்வூர் மக்களின் வாழ்வாதாரத்தை இவர்களே மறுத்தார்கள்.
காலங்காலமாக நாட்டின் குடிமக்களை பிளவுபடுத்தும் அரசியலையே மேற்கொண்டு வருகிறார்கள். மக்களை உணர்ச்சி வசப்படுத்தி தமது இருக்கைகளை தக்க வைப்பதே  இவர்களின் இலக்கே ஒழிய மக்களை ஒற்றுமைப்படுத்துவதல்ல. காரணம் மக்கள் ஒன்றுபட்டால் தங்கள் பிழைப்பு கெட்டுவிடும் என்பதே ஆகும்.

நல்லாட்சி அரசை நிறுவுவதற்கு தமிழ் மக்களின் வாக்குகளும் பெரும் பங்கு வகித்ததென கூறும் இவர்கள் ஏன் இன்னும் அரசியல் தீர்வைப் பெற்றுகொள்வதற்கான  நடவடிக்கையில் உரிய முறையில் இறங்கவில்லை?  இவர்கள் செய்ய வேண்டியது தீர்மானங்களோ, அறிக்கைகளோ, வாய் பேச்சுக்களோ, உணர்ச்சிகளைக் சீண்டிவிடும் ஊர்வலங்களோ அல்ல. அத்தகைய ஆக்கபூர்வமான உரையாடலை உரியவர்களுடன்   இலகுவாக நடாத்துவதற்கு  இன்றைய பாராளுமன்ற எதிர்க் கட்சித் தலைவருக்கு சகல தகுதியும் அதிகாரமும் உண்டு. நாட்டின் அனைத்துக் குடிமக்களின் நலன்களையும் பாதுகாக்க வேண்டிய பெரும் பொறுப்பும் அவருக்கு உண்டு. இன்றைய அரசியல் சூழலையும், நல்லாட்சி அரசாங்கத்தின் வளங்களையும் தாராளமாகப் பயன்படுத்தி அவரால் தென்னிலங்கை மக்களின் இதயங்களை வென்றெடுக்க முடியும்.
ஆனால் இவர்கள் எமக்காக பேசவும் மாட்டார்கள். அவர்களுடனான உரையாடலை நடாத்தவும் மாட்டார்கள். இவ்வாறன பேச்சில் இறங்கி சிலசமயம்  நாட்டில் சமாதானம்  வந்துவிட்டால் . இவர்களது  பிழைப்பு என்னவாகும்? அன்று இணக்க அரசியலை கையாண்டவர்களை துரோகி என்று கூறியவர்கள் இன்று மட்டுமல்ல முன்னரும் பல தடவைகள் சிங்களப் பேரினவாத அரசாங்கங்களுடன் இணங்கிப் போன வரலாறு உண்டு. துரோகிகள் எனப் பிரகடனம் செய்து தண்டனை வழங்கியவர்கள் கூட அதே பேரினவாத அரசுடன் இணங்கிப் போனதும் இலங்கையின் வரலாற்றில் பொறிக்கப்பட்டுள்ளது.
இது “அடுத்தவர் செய்தால் அது துரோகம், நாங்கள் செய்தால் அது தந்திரோபாயம். ” என்பது இதைத்தான்.

''Do not return to the country'', The Chief Minister of the North Warns the people who claimed Political Asylum Abroad.

Eelam Tamils ​​are seeking political asylum abroad and return to normal levels did not return to the country, said that the Provincial Chief civiviknesvaran.Cuviscarlantu visiting Sri Lanka with the Minister of Justice, he said in response to a question from a journalist's visiting.Commenting on this, he continued, the Eelam Tamils ​​seeking asylum in the country, the situation in the country did not send it back.United National Party and the Sri Lanka Freedom Party and government to hold the combination of both the north and has recorded 17 cases of torture.Terrorism prevention will be maintained until the Tamils, were arrested and sent back to persecution, he said.I do not say all good things come to. The government claimed that the removal of the PTA. However, it is still not deleted.Even after last year's attack on the eighth month of January, 17 incidents were reported in relation to harassment.The country's current situation much better than it was before. Re-established democracy. There is the opportunity to engage in discussions.There is a safe environment for young people that participated in the war, although I can not say. PTA removed, the recorded cases of persons in detention and prolonged detention and harsh manner.This is already happening in the case of political prisoners, he said. Positive answer to this question prevents me PTA.PTA is removed, the normal laws implemented ensure their safety. Alaittuvant tancamataintavarkalai abroad back to the country detained them, what did you do 15 years ago?What did you do 20 years? The investigation will be done 5 years ago. Priority was given to them to engage in armed struggle kattappattamaiye discrimination.Therefore, conditions should be created for their safe return. The PTA must first be removed.In a different method should be brought back to the PTA. In relation to the past, to be granted a pardon. If so, everyone can come to the country. They must. Provincial Chief Minister further said that we will welcome them.Meanwhile, between cuviscarlantu and Sri Lanka to deport refugees to the bilateral agreement was signed yesterday.

Original news from Tamilwin.com 
Related news from minnal