Monday 29 December 2014

Rajapaksa was hanged until death- attached video


ராஜபக்ச குடும்பம் மக்களிடமிருந்தும், ஆளும் வர்க்கத்தின் இரண்டாவது மட்டங்களிடமிருந்தும் அன்னியப்பட்டுப் போயுள்ள நிலையில்  , தனக்கு நம்பிக்கையானவர்களே இறுதியில் காலை வாரிவிடலாம் என்ற பெரும் அச்சம் ராஜபக்ச குடும்பத்திடம்  தலைதூக்கியுள்ளது.
2015.01.08 ஆம் திகதி தேர்தலில் ராஜபக்ச தோல்வியைத் தழுவினால் நாட்டைவிட்டுத் தப்பியோடுவதற்கு வசதியாக, இறுதிக்கட்ட போரின்போது புலிகளிடம் இருந்து கொள்ளையடித்து ராஜபக்ச குடும்பத்தினரால் பதுக்கிவைக்கப்பட்ட 350 தொன் தங்கத்தை apuga Holdings Private Ltd நிறுவனத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஜப்பானிய மில்லியேனேரான Keiji Matsumura என்பவருகு விற்பனை செய்து பணத்தைப் பெற்றுள்ள தகவல் தற்போது கசிந்துள்ளது. 
இதுவரையும் ராஜபக்சவுடன் கூடியிருந்த  சிங்கள பௌத்த பேரினவாதிகள் , இனப்படுகொலையில் பங்காற்றியவர்கள், ஏகாதிபத்திய அடியாட்கள் போன்ற அனைவரதும் கூட்டான எதிரணி   ஜனநாயகத்தை மீட்கப்போவதாக களத்தில் இறங்கியுள்ளமை ராஜபக்சவுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளமை இத் தங்க விற்பனைக்குக்  காரணமாக இருக்கலாம். 
மேலும் ராஜபக்ச திருப்பதி கோவிலுக்கு  சென்றமை வழிபாட்டிற்காக மட்டுமல்ல, பணம் மற்றும் தங்கப் பரிமாற்றத்தை கவனித்துக்கொள்வதற்காகவும் என குறிப்பிடப்படுகிறது.


Thursday 25 December 2014

politician and Sri Lankan Politics

குறள் 548 (அரசியல் - செங்கோன்மை)

எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்.

உரை:
ஆடம்பரமாகவும், ஆராய்ந்து நீதி வழங்காமலும் நடைபெறுகிற அரசு தாழ்ந்த நிலையடைந்து தானாகவே கெட்டொழிந்து விடும்.

Explanation:
The king who gives not facile audience (to those who approach him), and who does not examine and pass judgement (on their complaints), will perish in disgrace.



"பொதுப் பணத்தை நெருப்பா நினைக்கணும்"
கார் பழுது பட்டதால், டாக்சியில் ஏறி கட்சி அலுவலகத்துக்கு வந்த காமராஜர், டாக்சிக்கு பணம் கொடுத்து அனுப்பும்படி தன் உதவியாளரிடம் கூறி விட்டு,தன் அலுவல்களைப் பார்க்க ஆரம்பித்தார். உதவியாளர் டாக்சி டிரைவரிடம் பணத்தைக் கொடுத்து இரசீது பெற்றுக் கொண்டார்.

அன்றைய வரவு செலவினைச் சரிபார்த்த காமராஜர், டாக்சிக்கு கொடுத்த பணம் அதிகம் என உணர்ந்து உதவியாளரைச் சாடினார்.

"டாக்சி மீட்டர் எவ்வளவு ரூபாய் காட்டியது என்று பார்த்தாயா?"  என்று உதவியாளரை பார்த்துக் கேட்டார் காமராஜர்.

"இல்லை டாக்சி டிரைவர் கேட்ட பணத்தைக் கொடுத்தேன் ஐயா."
"நீ மீட்டரைப் பார்த்து, அதன் படிதானே பணம் தர வேண்டும்? மீட்டரைப் பார்க்காமல், டாக்சி டிரைவர் கேட்ட ரூபாயை நீ கொடுக்கலாமா? இது பொதுப்பணம் இல்லையா? அஞ்சு ரூபாய், பத்து ரூபாய்ன்னு, பொது மக்கள் கிட்ட வசூலிச்ச பணத்தை நாம நெருப்பு மாதிரிக் கையாளணும். சிக்கனமாகச் செலவழிக்கணும். கட்சிப் பணத்தை, காமராஜர் தன் இஷ்டத்துக்குச் செலவு பண்ணி, வீணாக்கிட்டார்னு குற்றச்சாட்டு வரக் கூடாது," எனக் கூறினார்.
இப்ப இருக்கிற ஆட்சியாளர்கள் பொதுமக்கள் உயிரையே மதிக்கமாட்டார்கள், எப்படி  பொதுமக்கள் பணத்தை மதிப்பாங்கள்,எல்லாம் அவங்களின் பரம்பரைச் சொத்தெண்ட நினைப்பு.


Sunday 21 December 2014

Sri Lankan Presidential Election, 2015 - NEWS 7 TAMIL ANALYSIS

இலங்கையில் 2015.01.08 ஆம் திகதி  இடம்பெறவுள்ள  ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக NEWS 7 TAMIL தொலைக்காட்சியில் நடைபெற்றது. இவ் அரசியல் ஆய்வில் பா.ஜ.க நிர்வாகி திரு கல்யாணராமன், ஊடகவியலாளர் லக்ஸ்மி சுப்ரமணியன், திருமுருகன் காந்தி மற்றும் லதன்  சுந்தரலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டு தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும் தமிழ் பேசி வாக்குக் கேட்டவர்தான் ,ரணசிங்க பிரேமதாசா,சந்திரிகா குமாரதுங்க அனைவரும் தமிழ் பேசி வாக்குக் கேட்ட ஒரே குட்டையில ஊறிய மட்டைகள்தான். இவர்களுக்கு தமிழ் மக்களின் வாக்குகள் மட்டும்தான் வேண்டும்.தேர்தல் முடிந்தால் நீ யாரோ, நான் யாரோ.





Thanks-Raj

Thursday 18 December 2014

DOCUMENTARY OF TAMIL EELAM Part-05 and 06

DOCUMENTARY OF TAMIL EELAM Part-05

அமைதி காக்கும் படை எனும் பெயரில் இலங்கை வந்த இந்திய இராணுவம் தமிழ் மக்களுக்கும் என்ன செய்தது,அதனை தொடர்ந்து வந்த அரசுகள் என்ன செய்தன என்ற விடயங்களுடன் இறுதிக்கட்டப் போராட்டம் வரை .............



DOCUMENTARY OF TAMIL EELAM Part-06

இலங்கைத் தமிழர்களுக்கான தீர்வு சாத்தியமில்லையா,உலக நாடுகளில் இவ்வாறான பிரச்சனைகள் சுமுகமாக தீர்க்கப்படவில்லையா?.............இன்று ஸ்காட்லான்ட் வாக்கெடுப்பு முடிந்துவிட்டது.மக்களின் தீர்ப்பு பிரிந்து செல்வதற்கு எதிராக கிடைத்துள்ளது ஏனெனில் பிரித்தானியாவில் தனிமனித சுதந்திரம் (மதம்,மொழி,இன) மதிக்கப்படுவதகும்.


தமிழ் ஈழம் குறித்த மிக நுட்பமான புரிதலுக்கு கண்டிப்பாக அனைவரும் காணவேண்டிய காணொளி. 
ஆவணப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், தொழில்நுட்பாளர்களுக்கு எமது நன்றிகள்.


அனைவரும் பார்த்து பகிருங்கள்.



தலைமைச்செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்
2006-12-14
எமது சுதந்திர இயக்கத்தின் அரசியல் இராஜதந்திர நகர்வுகளில் எனக்குப் பக்கபலமாக இருந்து செயற்பட்ட எமது தேசத்தின் ஒளிவிளக்கு இன்று அணைந்துவிட்டது. ஆலோசனை வேண்டி, ஆறுதல் தேடி ஓடுவதற்கு பாலாண்ணை இன்று என்னுடன் இல்லை. இவரது மறைவு எனக்கு மாத்திரமல்ல தமிழீழ தேசத்திற்கே இட்டுநிரப்பமுடியாத பேரிழப்பு.
பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே விரியும் காலமாக மனிதவாழ்வு நிலைக்கிறது. இந்த வாழ்வுக்காலம் எல்லா மனிதர்களுக்கும் ஒரேமாதிரியாக, ஒத்ததாக, ஒருசீராக அமைவதில்லை. காலச்சீரற்றதாக ஒருவருக்குக் கூடி, மற்றவருக்குக் குறுகி, இன்னொருவருக்கு அதிகம் நெடுத்து கூடிக்குறைந்து செல்கிறது. துரதிஸ்டவசமாக, பாலாண்ணையினது வாழ்வு இடைநடுவில் நின்றுபோய்விட்டது. தீவிரம்பெற்றுள்ள எமது விடுதலைப்போருக்கு அவர் நிறையப் பணிகளை ஆற்றவேண்டியிருக்கின்ற தருணத்தில் அவருக்கு மரணம் சம்பவித்திருக்கிறது. இதனை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. துயரத்தின் சுமை என் ஆன்மாவை அழுத்துகிறது. என் உள்ளத்தை உடைத்து, நெஞ்சத்தைப் பிளக்கிறது. கட்டுக்கடங்காத காட்டாறு போல சீறிப்பாயும் உணர்ச்சிப் பெருவெள்ளத்தை என்னால் வார்த்தைகளால் கொட்டமுடியாது. மனித மொழியில் இதற்கு இடமுமில்லை.
பழக ஆரம்பித்த நாள் முதலே எமக்கிடையே ஒரு இனம்புரியாத புரிந்துணர்வு ஏற்பட்டது. அந்தப் புரிந்துணர்வால் எழும் பற்றுறவால் பிணைந்துகொண்டு, எமது உறவு நல்லுறவாக வளர்ந்து நட்புறவாகப் பரிணமித்தது. சிந்தனையாலும் செயலாலும் ஒன்றுபட்ட மனிதர்களின் சங்கமமாக அந்த உறவு மலர்ந்தது. தினம்தினம் நாம் பகிர்ந்துகொண்ட வாழ்பனுபவத்தில் வலிமைபெற்று வளர்ந்தது. சாதாரண மனித உறவுகளிலிருந்து இது முற்றிலும் வேறுபட்டது. காலத்தால் கனிந்து, வரலாற்றால் வடிவம் பெற்ற ஒரு அலாதியான இலட்சிய உறவு அது.
பாலாண்ணையை நான் ஆழமாக நேசித்தேன். விடுதலை இயக்கம் என்ற மாபெரும் குடும்பத்தில் ஒரு மூத்த தலைமகனாக பிதாமகனாக மூன்று தசாப்தங்கள் வாழ்ந்தவர் அவர். நானும் அவரை அப்படித்தான் நோக்கினேன். ஒரு குடும்பமாக ஒன்றுசேர்ந்து ஒத்திசைவாக ஒன்றித்திருந்த நாட்களில் அவர் ஒரு சாதாரண மனிதப்பிறவி அல்ல என்பதைக் கண்டுகொண்டேன். மோசமாகச் சுகவீனமுற்று தினம்தினம் சாவோடு போராடியபோதும், தாங்கமுடியாத உடல்உபாதைகளால் வருந்தியபோதும், தளர்ந்துபோகாத உறுதிப்பாடு அவரிடம் இருந்தது. அவரின் இந்த இலட்சிய உறுதி எனது நெஞ்சத்தைத் தொட்டுநின்றது. அவர் துன்பத்தால் துவண்டபோதெல்லாம் எனது ஆன்மாவும் கலங்கியழுதது.
எமது இயக்கத்தின் வளர்ச்சியிலும் அதன் இன்றைய விரிவாக்கத்திலும் பாலாண்ணைக்கு ஒரு நிரந்தரமான இடம் இருக்கிறது. ஒரு மூத்த அரசியல் போராளியாக, ஒரு மதியுரைஞராக, ஒரு தத்துவாசிரியராக எல்லாவற்றுக்கும் மேலாக எனது உற்ற நண்பனாக இருந்து எனக்கு ஊக்கமும் உத்வேகமும் அளித்தவர். ஆலோசனையும் ஆறுதலும் தந்தவர். எனது உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டு, எனது பழுக்களையும் பங்கிட்டுக்கொண்டவர். எமது விடுதலை இயக்கம் தோற்றம்பெற்ற ஆரம்பகாலம் முதல் என்னோடு இருந்து, எல்லாச் சோதனைகளையும் வேதனைகளையும் சவால்களையும் சங்கடங்களையும் தாங்கிக்கொண்டவர். எமது அரசியல் இராஜதந்திர முன்னெடுப்புக்களுக்கு மூலாதாரமாக, முன்னால் நின்று செயற்பட்டவர்.
ஈழத்தமிழினம் பெருமைகொள்ளும் வகையில் அரசியல் உலகிலும் இராஜதந்திர உலகிலும் அளப்பெரும் சாதனைகள் புரிந்து, எமது தேசசுதந்திரப் போராட்டத்தை உலக அரங்கில் முன்னிறுத்திய பாலாண்ணையின் மாபெரும் போராட்டப்பணிக்கு மதிப்பளித்து தேசத்தின் குரல் என்ற மாபெரும் கௌரவப்பட்டத்தை அவருக்கு வழங்குவதில் நான் பெருமையடைகிறேன். பாலாண்ணை உண்மையில் எம்மைவிட்டுப் போகவில்லை. அவர் எமது நினைவலைகளில் என்றும் நீங்காத நினைவுகளாக நிலைத்து நிற்பார்.
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்
வே. பிரபாகரன்
தலைவர்
தமிழீழ விடுதலைப் புலிகள்

Tuesday 16 December 2014

you should respect your colleagues

What does it mean to respect your colleagues?

Respect is having consideration for yourself and others. This could mean respecting people’s privacy, their personal space, belongings, perspectives, philosophies, physical ability, beliefs and personality. It is also acting in honour of yourself, your values and your colleagues – recognizing their importance.

Why you should respect your colleagues

Respect is one of those things that is hard to gain and very easy to lose. We’ll talk more on how you can gain it shortly, but it’s important to know why you should respect your colleagues. Here are some of the benefits of respecting your co-workers – it will:
  • Build trust
  • Enhance your working relationships
  • Help you to enjoy work more
  • Increase job performance
  • Decrease stress
  • Improve teamwork, workflow and output.
How to respect others

Knowing what to do to show your respect for others is vital. It’s important that you pay attention to people to ensure you are showing respect in the way they want to be respected because if you get it wrong it could have the opposite effect.

  • Treat others with respect and dignity
  • Build a sense of community spirit by organizing little events – ensure you include everyone
  • Abide by work ethics
  • Maintain confidentiality
  • Treat your colleagues as you wish to be treated
  • Support your colleagues in times of need
  • Be an active listener, genuinely care about your colleagues
  • Start each morning with a cheerful greeting – a general “hello” or “good morning” is sufficient
  • Learn the art of small talk and accept teasing that is in good-taste
  • Ask for opinion and input – it shows you care what they think
  • Pretend your children/parents are watching when dealing with a difficult colleague
  • Give compliments often, recognise achievements where ever possible
  • Spread good cheer – do something each week: cook a cake, give a colleague a thank you card, give someone chocolates who has been a bit down etc.
  • Return calls and emails promptly
  • Give credit where credit is due, if someone mistakenly offers you credit, openly correct them and refer the credit to the person who has rightly earned it
  • Work as hard as everyone else in your team
  • Share any good ideas you have.
How to earn respect in the workplace
  • Manage your emotions
  • Keep your personal life separate
  • Remain positive: you don’t know what you don’t know
  • Manage your stress as best you can
  • Watch your communication: choice of words, tone of voice, body language etc
  • Accept feedback and instruction from your superiors
  • When communicating with colleagues talk about: what you are currently doing for the company, what are some of your goals you’re striving for or even personal goals that may affect work
  • Value face-to-face interactions and thank people for their time
  • Use emails if you have a specific request or update for a colleague so they can refer back to it at their convenience
  • Take responsibility for your assigned role and all the tasks that come with it
  • Say thank you and mind your manners, give positive feedback and validation for a job well done
  • Do something special for your colleagues or peers – running an errand, answering the phone or just generally doing something small to go the extra mile
  • Follow through when you say you will do something – never miss a deadline
  • Don’t be late for your meetings
  • Dress like you’re going to ask for a raise every day
  • Keep your workspace clean and tidy
  • Avoid drinking too much at work gatherings – this includes the Christmas party!
Thanks for web

Saturday 6 December 2014

DOCUMENTARY OF TAMIL EELAM Part-03 and 04



இலங்கையில் என்ன நடக்கிறது? இலங்கைத் தமிழர்கள் என்ன வேண்டுமென்று போராடுகின்றனர்? அவர்களின் போராட்டம் நியாயம்தானா? என பற்பல கேள்விகளும் ,விளக்கங்களும் அடங்கிய ஒளித்தொகுப்பு---

DOCUMENTARY OF TAMIL EELAM Part-03

இனவாத சிங்கள அரசுக்கெதிரான தொடர் போராட்டங்கள், இனக் கலவரங்கள் மூலம் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டமை ,போன்ற பல்வேறுபட்ட விளக்கங்கள் உள்ளடங்கிய காணொளி.


DOCUMENTARY OF TAMIL EELAM Part-04
உலகத் தமிழ் ஆராய்ச்சி மகாநாடு,முதல் சயனைட் அருந்தி வீரச்சாவைத் தழுவியது யார், தமிழீழ தனி நட்டுக் கோரிக்கை என இன்னும் பல அரசியல் விடயங்களை  உள்ளடக்கிய காணொளி.
தமிழ் ஈழத்தின் வரலாற்றுடன் ஆதி தமிழர் வரலாறும் இணைந்தே கூறப்பட்டுள்ள மிகச் சிறந்த ஆவணப்படம். ஈழம் குறித்த மிக நுட்பமான புரிதலுக்கு கண்டிப்பாக அனைவரும் காணவேண்டிய காணொளி. ஆவணப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், தொழில்நுட்பாளர்களுக்கு எமது நன்றிகள்.
அனைவரும் பார்த்து பகிருங்கள்.

Friday 5 December 2014

DOCUMENTARY OF TAMIL EELAM Part-01 and 02

இலங்கையில் என்ன நடக்கிறது? இலங்கைத் தமிழர்கள் என்ன வேண்டுமென்று போராடுகின்றனர்? அவர்களின் போராட்டம் நியாயம்தானா? என பற்பல கேள்விகளும் ,விளக்கங்களும் அடங்கிய ஒளித்தொகுப்பு---

DOCUMENTARY OF TAMIL EELAM Part-01



DOCUMENTARY OF TAMIL EELAM Part-02

 


தமிழ் ஈழத்தின் வரலாற்றுடன் ஆதி தமிழர் வரலாறும் இணைந்தே கூறப்பட்டுள்ள மிகச் சிறந்த ஆவணப்படம். ஈழம் குறித்த மிக நுட்பமான புரிதலுக்கு கண்டிப்பாக அனைவரும் காணவேண்டிய காணொளி. ஆவணப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், தொழில்நுட்பாளர்களுக்கு எமது நன்றிகள்.


அனைவரும் பார்த்து பகிருங்கள்.





Wednesday 3 December 2014

தமிழ் தேசிய மாவீரர் நாள் 2014 லண்டன் நிகழ்வுகள்

Dr. Andy 
associate professor in politics and human rights at Kingston University, 
addressing Tamil Heroes Day in London 
on 27 November 2014

Mr Lathan Suntharalingam, 
one of the initiators of the legal move against EU ban on LTTE,
addressing Tamil Heroes Day in London 
on 27 November 2014.