Thursday 21 July 2016

கறுப்பு ஜூலை இன அழிப்பு நினைவுகூறல் கூட்டம்

33 வருடங்களின் முன் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் உயிரைப் பலியெடுத்தும் தமிழரின் பல கோடிக்கணக்கான உடைமைகளை சூறையாடி தமிழ் மக்களை இலங்கைத் தீவின் தென் பகுதியிலிருந்து துரத்தியடித்த சிங்கள இனவாதம் காலத்திற்கு காலம் தன் வடிவங்களையும் வியூகங்களையும் மாற்றிக் கொண்டு தமிழ் இனத்தைக் கருவறுக்கின்றது.

சர்வதேச சமூகத்தின் அணுகுமுறையில் மாற்றங்கள் வராத வரை 1956, 1958, 1977, 1983, 2009 இற்குப் பின்னும் இன அழிப்பு தொடரத்தான் போகின்றது. 1983 இல் தமிழருக்கான சரியான பாதுகாப்புப் பொறிமுறை, அரசியல் அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தால் அதன் பின்னர் வந்த பல ஆயிரம் தமிழரின் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டிருக்கலாம். "NEVER AGAIN" என்று அடிக்கடி கூறும் சர்வதேச சமூகம் சிறிலங்கா அரசினைக் கையாள்வதில் மீண்டும் மீண்டும் தவறுகின்றது. இக் கருப் பொருளை வலியுறுத்தி 1983 கறுப்பு ஜூலை நினைவு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.


REMEMBRANCE DAY OF BLACK JULY. 
Until Changes do not fall in the international community's approach.Genocide will continue even after  2009.if given political power  for the Tamils,The deaths of several thousand of Tamils  have been avoided.

1983 Black July remembrance meeting has been organized and requested  to participate all Tamils by British Tamils Forum

Venue :TRINITY CENTRE
            East Avenue
            Eastham,E12 6SG

Date & Time :25th July,2016 Monday
                     6:30pm to 9:00pm