Sunday 27 November 2016

ஒலிம்பிக் பார்க்கில் மாவீரர் தின நிகழ்வுகள்


லண்டனில் உள்ள எக்ஸெல் மண்டபத்திற்கு அருகாமையில், உள்ள ஒலிம்பிக் பார்க்கில் மாவீரர் தின நிகழ்வுகள் நடந்து கொண்டு இருக்கிறது. கடும் குளிரையும் பொருட்படுத்தாது மக்கள் இதில் கலந்துகொண்டு தமது வீர வணக்கத்தை மாவீரர்களுக்கு

செலுத்தி வருகிறார்கள். இம்முறை கடல் புலிகளை நினைவுகூரும் வண்ணம் , அருகில் உள்ள ஆற்றில் படகில் கடல் புலிகளின் கப்பல் போல ஒரு படகு வடிவமைக்கப்பட்டு , அதிலும் ஈகைச் சுடர் ஏற்றப்பட்டுள்ளது.


தமிழரின் நீதியான கோரிக்கைகள் எப்போது கிடைக்கும்?

இலங்கையில் உள்நாட்டு போர் பல வருடங்களாக நிகழ்ந்த நிலையில் 2000ம்
ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் சமாதான பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியது.ஆனால் குறித்த சமாதான பேச்சானது 2006ம் ஆண்டளவில் மெல்ல மெல்ல முறிவடைந்தது. இந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் 2006ம் ஆண்டு தனது மாவீரர் தின உரையில் தமிழ் மக்களின் அடிப்படைப்பிரச்சினைகள் தொடர்பாக சில முக்கிய கேள்விகளை கேட்டிருந்தார் .அதற்க்கான ஆக்க பூர்வமான எந்த பதிலும் பத்து ஆண்டுகள் கடந்தும் வழங்கப்படவில்லை.மைத்திரி அரசும் பதவியேற்று இரண்டு ஆண்டுகளை எட்டவுள்ளது.


''போருக்கு ஓய்வு கொடுத்து, சமாதான வழியிற் சமரசப் பேச்சுக்கள்வாயிலாக எமது மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண நாம் நேர்மையுடனும் நெஞ்சுறுதியுடனும் முயற்சித்து ஆறு ஆண்டுகள் அசைந்தோடி விட்டன.
நாம்அமைதி காத்த இந்த ஆறு ஆண்டு காலத்தில் இந்த நீண்ட கால விரிப்பில் தணியாதநெருப்பாக எரிந்து கொண்டிருக்கும் தமிழரின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டதா? தமிழரைச் சதா கொடுமைப்படுத்திக் கொன்றொழித்து வரும் சிங்கள ஆட்சியாளர்களின் மனவுலகில் மாற்றம் நிகழ்ந்ததா? தமிழரின் நீதியான நியாயமான கோரிக்கைகள் எவையும் நிறைவேற்றப்பட்டனவா?
ஆக்கிரமிப்பு இராணுவத்தின் அடாவடித்தனங்களால் நாள்தோறும் அவலத்திற்கும், இம்சைக்கும் ஆளாகி நிற்கும் எம்மக்களுக்கு நிம்மதி கிடைத்ததா? எம்மக்களை நாளாந்தம் அழுத்தி வரும் அன்றாட அவசியப் பிரச்சினைகள் தானும் தீர்த்து வைக்கப்பட்டனவா? எதுவுமே நடக்கவில்லை மாறாக  எத்தனையோ கனவுகளோடு ,  எத்தனையோ கற்பனைகளோடு நீதி கிடைக்கும் என காத்திருந்த தமிழருக்கு சாவும் அழிவுமே பரிசாக கிடைத்திருக்கின்றன     சோதனைமேல் சோதனையாக, வேதனைமேல் வேதனையாகத் தாங்க முடியாத துயரச்சுமை தமிழர் மீது சுமத்தப்பட்டிருக்கிறது. இந்த வேதனையால் அழுதழுது கண்ணீர் தீர்ந்து, இரத்தமே கண்ணீராக வருகின்ற சோகம் தமிழினத்திற்கு ஏற்பட்டிருக்கிறது''.

குறித்த கேள்விகள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் தனது மாவீரர்தின உரையில் குறிப்பிட்டிருந்தார். அதாவது அரசானது நேர்மையாக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சனையைகூட  தீர்த்துக்கொள்ள முன்வரவில்லையெனில், எப்படி இந்த அரசு நியாயமான அரசியல் தீர்வினை முன்வைக்கும்? என்பதேயாகும்.அதற்கான பதிலை  இலங்கையின் இனவெறி பிடித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் அவரின் சகோதரர்களும் சர்வதேசத்தின் ஆதரவுடன் நடத்திய கொடூர யுத்தத்தின் மூலம் பல்லாயிரம் மக்களை கொண்று குவித்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் கூற்றை உறுதி செய்திருந்தனர்.


இன்று நாட்டின்  ஜனாதிபதி மாறியுள்ளார் என்று மட்டும் சொல்லலாம்
ஆனால் நம் தமிழ் இனத்திற்கு எந்த முன்னேற்றமும் ஏற்படபோவதில்லை என்பது  உறுதி, ஏனெனில் இன்றைய ஜனாதிபதி மைத்திரி தான் தமிழ் மக்கள் அதிகமாக படுகொலை செய்யப்பட்ட காலத்தில் மஹிந்த ராஜபக்சவின் அரசின் பாதுகாப்பு அமைச்சராக இருந்தார். அதேபோல இன்றைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க பேச்சு வார்த்தை என்ற பெயரில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை பிளவுபடுத்தியவர். இவர்களால்  தமிழ் இனத்திற்கு விடிவு கிடைக்குமா???



Sunday 13 November 2016

பெண் பொலிசார் ஒருவரை கலைத்துக் கலைத்து தாக்க முற்படும் விகாராதிபதி

மட்டக்களப்பில் நடு வீதியில் வைத்து கிராம சேவையாளருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்து அவரை கடும் போக்கான வார்த்தைகளையும் பிரயோகித்து தகாத வார்த்தைகளால் திட்டிய மங்களராமய விகாராதிபதி அண்மையில் பொலிஸ் அதிகாரி மற்றும் பொலிசார் பலர் முன்னிலையில் பெண் பொலிசார் ஒருவரை கலைத்துக் கலைத்து தாக்க முற்படும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

இன்றைய தினமும் பிக்கு விகாராதிபதியாக உள்ள விகாரைக்கு விசாரணை நடத்தச் சென்ற பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர் மீது அவதூறான வார்த்தைகளையும் கூறி திட்டியதோடு அவரை தாக்க முயன்றார்.

இங்கு அவரை தடுக்க பொலிஸார் தமது அதிகாரத்தை பிரயோகிக்கவோ, அல்லது முறையான கட்டுப்படுத்தலையோ மேற்கொள்ளவில்லை, ஏனெனில் அவர் ஒரு சிங்கள மதகுரு. பொலிஸ்அதிகாரங்கள்,நீதிமன்ற கட்டளைகள் ,சட்டங்கள் அப்பாவி தமிழரை நோக்கி பல மடங்கு வீரியத்துடன் பாயும் அனால் பெரும்பான்மை இனத்தவரை அல்ல.


11ம் திகதி சட்டவிரோத காணி அபகரிப்பைத் தடுக்கச்சென்ற பட்டிப்பளை பிரதேச செயலக குழுவினரை மிக்க கடுமையான இனவாத வார்த்தைகளால் திட்டியுள்ள மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமன ரத்தின தேரர் தமிழர்கள் அனைவரையும் கடுமையாக எச்சரித்து திட்டிய வார்த்தைகள்.



Saturday 12 November 2016

இனவாதத்தை கக்கும் விகாராதிபதி All Tamils ​​are Tigers,Racism Priest

நல்லாட்சி  நடைபெறுகிறது என சர்வதேச மட்டத்தில் இலங்கை நற்பெயரை பெற்றுக் கொள்ள மட்டும் முயன்றால் போதாது, அது நடைமுறையில் சாத்தியப்படவேண்டும், அப்போதே நாடும் சரி மக்களும் சரி நிம்மதி பெற முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை.

மதக் கருத்துகளை போதிக்க வேண்டிய,அமைதி வழியை பின்பற்ற வேண்டிய  மதப்போதகர்களே  கடும் போக்காளர்களாக  மாறினால் அவரை பின் தொடரும் மக்கள் எவ்வாறான போக்கை கொண்டிருப்பார் என்பது எவருக்கும் சொல்லித் தெரியவேண்டியது இல்லை.

நேற்றைய தினம்  ஓர் பௌத்த பிக்கு நூற்றுக்கணக்கானவர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்க்க, அவர் தமிழர்கள் மீதும், மக்கள் மத்தியில் மதிக்கத்தக்க அரசாங்க பதவியை வகிக்கும் கிராம சேவையாளர் ஒருவர் மீதும் பிரயோகித்த வார்த்தைகள் மிகவும் கீழ்த்தரமாக அமைந்தன. நீதிமன்றத்திற்கு முன்னிலையில் பிக்குவின் வாயில் இருந்து வந்த கீழ்த்தரமான, இனவாத வார்த்தை பிரயோகங்கள்  ஒழுக்க விதிமுறைகளை கட்டுப்படுத்த வேண்டிய பொலிஸாரினாலும்  வேடிக்கை பார்க்கப்பட்டதே தவிர  கட்டுப்படுத்தப்பட வில்லை என்பது மிகவும் மனவருத்தம் தரக்கூடியது. மேலும்  இவ்வாறு பொது மக்களின் முன்னிலையில் அவ்வுத்தியோகத்தர் அவமானப்படுத்தப்பட்டதற்கும், அதனை மற்றவர் வேடிக்கை பார்க்கும் நிலைக்கும்  முக்கிய காரணம் அவர் தமிழர் என்பதேயாகும் .

கடுமையான சட்டங்கள் மூலம் இனவாதம் முற்றாக நாட்டை விட்டு விரட்டப்பட்டு, விஷக்கிருமிகளை நசுக்கபடாவிட்டால், அரசு அபிவிருத்தியும் நல்லிணக்கமும் நிறைந்த நாடு என சர்வதேசத்திற்கு நிறுவுவது மட்டும் எட்டாக்கனியாகவே அமையும்.  ஆட்சி மாற்றம், வாக்குறுதிகள் மட்டும் கொடுத்துக்கொண்டு வரப்படுமாயின், எத்தனை ஆட்சியும் தலைமைகளும் வந்தாலும் ஒற்றுமை என்பது இலங்கையை பொறுத்த வரை சாத்தியமில்லாததொன்றே.
ஒரு தரப்பை தூண்டிவிட்டு மற்றுமோர் தரப்பிற்கு எச்சரிக்கைகளையும், கட்டளைகளையும் பிறப்பித்து வரும்போது பாதிக்கப்படுவது ஒரு இனம் அல்ல  முழு நாடும் என்பதே நிச்சயம்.

நேற்றைய  தினம்11ம் திகதி
சட்டவிரோத காணி அபகரிப்பைத் தடுக்கச்சென்ற பட்டிப்பளை பிரதேச செயலக குழுவினரை மிக்க கடுமையான இனவாத வார்த்தைகளால் திட்டியுள்ள மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமன ரத்தின தேரர் தமிழர்கள் அனைவரையும் கடுமையாக எச்சரித்து திட்டிய வார்த்தைகள்.






Thursday 10 November 2016

தமிழர்களை சத்தமில்லாமல் அழிக்கும் புதிய அரசு

ஆயுதப் போராட்டம் இடம்பெற்ற காலங்களில் வட பகுதியில் இல்லாத பல சமூக விரோத செயல்கள் இன்று விஸ்வரூபம் எடுத்துள்ளது குறிப்பாக போதைப் பொருள் பாவனை,விபச்சாரம் போன்றவற்றின் கேந்திர நிலையமாக உருவாகியிருப்பது குறித்து கவலை கொள்ளாதவர் எவரும் இருக்க முடியாது ,இன்றைய நிலைக்கு முற்று முழுதாக இலங்கை அரசுதான் காரணம் என்பதற்கு மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இவ் அழிவில் இருந்து எதிர்கால சந்ததியை காக்க  தமிழ் மக்களும், தமிழர் அரசியல் தரப்பும் உணர்ந்து செயற்பட  வேண்டும்.

வடக்கில் இன்றும் 1 இலட்சத்து 50 ஆயிரம் சிங்கள இராணுவம் கடமையில்
ஈடுபட்டுள்ளதுடன், அவர்களுக்கு மேலதிகமாக கடற்படை, விமானப்படை மற்றும் வலம் வரும் நிலையில், கடல் வழியாக கஞ்சா வட பகுதிக்கு எவ்வாறு எடுத்து வரப்படுகின்றது என வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.மேலும் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை கரையேற்றுவது எவ்வாறு என விழித்துக் கொண்டிருக்கும் வேளைகளில் வாள்வீச்சு, போதைப் பொருள் பாவனை மக்களிடையே அதிகளவில் பரவிவருவது மிகுந்த குழப்பத்தை உண்டுபண்ணுவதாக அமைந்துள்ளது.

வட பகுதியில் தொடர்ந்தும் காணப்படும் இறுக்கமான பாதுகாப்பு அரணையும் தாண்டிப் போதைப் பொருட்கள் எடுத்துவரப்படுகின்றது எனின் இதில் சிங்கள அரசின் சதித்திட்டம் உள்ளடங்கி இருப்பதை எவரும் இலகுவாக விளங்கிக்கொள்ள முடியும். தமிழ் பிரதேசத்தை மையப்படுத்தி மேற்கொள்ளப்படும் இந்நடவடிக்கை அடுத்த தலைமுறையை சுயசிந்தனை இல்லாத, ஆற்றலற்ற, விடுதலை உணர்வில்லாத ஒருதலைமுறையாக உருவாக்குவதையே சிங்கள அரசு செய்து கொண்டிருக்கிறது.

போர் நடைபெற்ற காலத்தில்கூட போதைப் பொருள் பாவனையோ,கலாச்சார சீரழிவோ இருந்ததில்லை.பலம் பொருந்திய புலிகளை அழித்தவர்களுக்கு இந்த சிறிய விடையத்தை தடுத்து நிறுத்தத்  தெரியாமல் இல்லை. முதலமைச்சர் விக்னேஸ்வரன் சொல்வதைப் போன்று வடக்கில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான இராணுவத்தினர் கடமையில் இருந்தும் இவ்வளவு போதைபோருளும் , வாள் வெட்டுக் குழுக்களும் எங்கிருந்து வருகின்றன? எவ்வாறு செயற்படுகின்றன என்பது குறித்து சிந்திப்பது அவ்வளவு பெரிய விடையமல்ல.

இலங்கை அரசாங்கம் எதை நினைக்கிறதோ அதையே திட்டமிட்ட வகையில் செயற்படுத்திவருகின்றது.மூன்று சாகப்தங்களாகபோரினால் பாதிக்கப்பட்டு எமது உயிர்களையும் சொத்துக்களையும் எதிர்கால வாழ்வினையும்தொலைத்துவிட்டு, அந்தச் சரிவில் இருந்து மெதுவாக எழுந்து நிற்க முன்னர், வடக்கில் இன்று நிகழ்த்தப்படும் திட்டமிட்ட இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளால் நெஞ்சம் நெக்குருகிப்போகின்றது. உண்மையில் சிங்கள அரசின் உண்மையான நோக்கம் ஒன்றே ஒன்று தான். தமிழ் மக்களை எப்பாடுபட்டேனும் அடக்கிவிடவேண்டும். அவர்களின் அடுத்த தலைமுறையினர் திசை மாறிச் செல்ல வேண்டும். அவர்களும் சுயநிர்ணயம், சுயாட்சி, அதிகாரம், தீர்வு என்று உரிமைக் குரல் எழுப்பக் கூடாது.

இதை இன்றைய அரசாங்கம்மட்டுமல்ல, ஆட்சிப் பீடம் ஏறிய அத்தனை அரசாங்கங்களும், ஆட்சியாளர்களும் செய்துதான். இது மைத்திரி. ரணில் அரசாங்கத்தின் புதிய உத்தியல்ல. முன்னைய அரசாங்கங்கள் பள்ளிக்கூடங்கள், ஏனைய கல்வி நிறுவனங்களை அழித்தன. இன்றைய அரசாங்கமும்  மாணவர்களையும், இளைஞர்களையும் அழிக்க, சிதைக்க தலைப்பட்டு இருக்கிறது.

இலங்கையில் மகிந்த ஆட்சியை ஒழித்து, மைத்திரி ஆட்சியைக் கொண்டு வருவதற்கு வேண்டுமானால் தமிழ் மக்கள்உதவிபுரிந்திருக்கலாம். அதற்கு நன்றி விசுவாசமாக இவர்கள் தமிழ் மக்களுக்கு அதிகாரங்களை வழங்க முயற்சிப்பார்கள் என்று எதிர் பார்ப்பது அடி முட்டாள்த்தனமே.

சர்வதேச அழுத்தங்களை இலங்கை அரசாங்கங்கள் சமாளிக்கவே முயற்சிக்கின்றது. இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழர்களுக்கு சுதந்திரம், ஒரு தடை அல்ல எனக்  காட்டிக்கொள்ளும் அரசு, அந்தஇடைவெளியிலும் தமிழர்கள் நிதான நிலைக்கு வரக்கூடாது என்பதில் விடாப்பிடியாகஇருக்கிறது. இன்றைய ஜனாதிபதி எளிமையானவராக தெரியலாம். அவர், சாதாரணமானவர்களைப் போன்று செயற்படலாம். ஆனால் அவரும் முன்னைய அரசாங்கங்களின் தலைவர்களைப் போன்ற மனநிலையை கொண்டவரே. உண்மையில் இவ் அரசாங்கமானது  தமிழர்களை இன்னொரு விதத்தில் அழித்துக்கொண்டுவருகின்றது. அது சத்தமில்லாமல்  நடத்தப்படுகின்றது.

தமிழரையும் ,தமிழரது நிலம், கலாச்சாரங்களையும் அடக்கி , அழிக்க கங்கணம் கட்டி நிற்கும்  தீய சக்திகளிடம் இருந்து   நமது தமிழீழ தாயக பூமியானது காக்கப்பட வேண்டும். இன்றைய நிலையில் சர்வதேச அமைப்புகளுக்கு முறையான அழுத்தங்களை கொடுப்பதே சிறந்த வழியாகவுள்ளது. மேலும் தாயகத்தில் உள்ள தமிழ் தமிழ்த்தலைமைகள் பதவி  மோகத்தில் மௌனமாக இருக்காது  எதிர்கால சந்ததியை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும், இல்லையேல் இவர்களை எதிர்காலம் ஒருபோதும் மன்னிக்காது..

we love hindus