Tuesday 28 February 2017

Failing the Victims: An Expert Assessment of the Sri Lankan Government’s...

Sunday 26 February 2017

UN மேலதிகமாக கால அவகாசம் வழங்கக் கூடாது, இலங்கை சர்வதேசத்தை ஏமாற்றுகிறது.

2015ம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதி புதிய ஜனாதிபதியாக மைத்ரிபால சிறிசேன ஆட்சி ஏறியதன்  பின்னர் நடைபெற்ற மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து கலப்பு முறையிலான விசாரணை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி அமெரிக்கா பிரேரணை கொண்டு வந்திருந்தது. இப்பிரேரணையானது   இலங்கை அரசாங்கத்தின் அனுசரணையுடன் நிறைவேறியிருந்தது. மேலும் புதிய அரசியல் அமைப்பின் ஊடாக தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்பட்டு அனைவரும் ஒற்றுமையுடன், இலங்கையர்கள் என்ற வகையில் சமாதானமாக வாழும் நிலை ஏற்படுத்தப்படும் என சர்வதேசத்திற்கு வாக்குறுதியும்  வழங்கப்பட்டது. எனினும் வாக்குறுதி வழங்கப்பட்டு 18 மாதங்கள் கடந்த நிலையில் அப்பரிந்துரைகள் அடங்கிய தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு மேலும் கால அவகாசம் தேவையாகவுள்ளது என்ற கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்வதற்காக அரசாங்கம் பலமுனைகளில் நடவடிக்கை எடுத்து வருகின்றது.


ஐ.நா.மனித உரிமை பேரவையினால் வழங்கப்பட்ட பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் முறையாக நடைமுறைப்படுத்தினால் மட்டுமே தமிழ் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.

சர்வதே குற்றவியல் நீதிமன்றம், ஐ.நா மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களின் கரிசனை தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு மிகவும் அவசியமாகும். இலங்கை அரசாங்கம் இதுவரையிலும் தமிழ் மக்களின் உரிமைக்காக காத்திரமான எந்த விடயங்களையும் செய்யவில்லை இந்தநிலையில்  காலநீடிப்பு வழங்குவது தமிழ் மக்களின் பாதுகாப்பை மேலும் கேள்விக்குறியாக்கிவிடும். இக் கால நீடிப்பின் நோக்கம் போர்குற்றங்களை மறக்கச்செய்யும் ஒரு தந்திரோபாயம் என்றே கருதவேண்டும்.

இதுவரைகாலமும் வழங்கப்பட்ட அவகாசத்தில் எவ்வித முன்னேற்றகரமான விடயங்களும் மேற்கொள்ளப்படவில்லை. இதன்மூலம் இலங்கை அரசாங்கத்திடம் முறையான அரசியல் திட்டம்  இல்லை என்பதுடம் தமிழ் மக்களை மீண்டும், மீண்டும் ஏமாற்றவே முயற்சிக்கிறது என்பது தெளிவாகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய தரப்பினர்கள் பலரும் ஐக்கிய நாடுகளினால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்த முடியாதெனவும், இந்த பரிந்துரைகளை ஏற்க மாட்டோம் எனவும், தாம் ஒருபோதும் தமிழருக்கு எதிரான போரில் ஈடுபட்ட எவரையும் காட்டிக்கொடுக்க மாட்டோம் என பொதுமக்கள் மத்தியில் பகிரங்கமாக தெரிவித்திருந்தனர்.

இந்தநிலையில், எத்தனை காலநீடிப்பு இலங்கைக்கு வழங்கினாலும் தமிழ் மக்களுக்கு எந்தவித முன்னேற்றமும் ஏற்படப்போவதில்லை, மாறாக மேலதிகமாக கால அவகாசம் தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர ஊக்கம் அழிப்பதாக அமைந்துவிடும். போர் முடிந்து எட்டு வருடங்ள் ஆகியும் இன்றும் தமிழ் மக்கள் பல்லாயிரம் மக்களை கொன்று, பாலியல் வன்முறையில் ஈடுபட்ட வெறி பிடித்த சிங்கள ராணுவத்தின் மத்தியில் அச்சத்துடன் வாழ்கின்றனர். காணமல் போதல்,கப்பம் பெறுதல், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இன்றும் தொடர்கிறது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்டத்தொடர் நாளை  திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

Friday 10 February 2017

தமிழக மக்கள் ஏன் இவ்வளவு அப்பாவியாக இருக்கிறார்கள்?

சசிகலாவை ஆயம்மா, வேலைக்காரி என கிண்டல் செய்வதைப் போன்ற  ஒரு  குருட்டுத்தனம் வேறு இருக்க முடியுமா? ஜெயலலிதாவே  சசிகலாவை 
தனது உடன்பிறவா சகோதரி எனக்குறிப்பிட்டதை அறியாதவர்களா? சசிகலா தனது உயிர்தோழி என தன்பக்கத்திலேயே வைதிருந்தாரே அதை  மறந்துவிட்டனரா?? இதையும்தாண்டி எந்த ஆயம்மாவாவது  சாராய ஆலை வைத்திருக்கிறாரா? எந்த வேலைக்காரி ஜாஸ் தியேட்டர் வாங்கியிருக்கிறார்?? பாத்திரம் தேய்க்கின்றவரால் பையனூர் பங்களாவை பறிக்க  முடியுமா??? இந்த  கங்கை அமரன் தனது பையனூர் பங்களாவை சசிதான் பிடிங்கினார் என பத்திரிகையாளர் சந்திப்பில் பேட்டி கொடுக்கிறாரே, ஏன் இந்த அமரன்  சம்பந்தமே இல்லாத ஜெயலலிதாவிடம் நியாயம் கேட்டிருக்க வேண்டியதுதானே? முட்யுமா? முடியாது! ஏனெனில் பிடிங்கியது  இருவருமாக சேர்ந்துதான். நாலாயிரம் கோடி தங்கம் .டிரான்சி நில ஊழல் இன்னும் எத்தனையோ   இதில் எங்கே ஜெ முதலாளியானார், சசி வேலைக்காரி ஆனார்? கொஞ்சமாவது லாஜிக் வேண்டாமா?

உண்மையில் இந்த இரு முதலாளிகளுக்கும் வேலைக்காரர்களாக இருந்தது பதவிக்காக டயர் வரை கூழைக் கும்பிடு போட்டு, காலால் இட்ட பணியை
தலையால் செய்துமுடித்த ஓ.பி.எஸ் போன்றவர்கள் தான். ஜெ செத்து இத்தனை நாட்கள் ஆனபின் அவருக்கு ஞானம் வருகிறதாம். தனது முதல்வர் பதவி பிடுங்கப்பட்டவுடன், சசிக்கு மக்களிடையே எதிர்ப்பு உள்ளது என நன்றாக தெரிந்தவுடன் இவரிடம் ஜெ ஆன்மா பேசுகிறதாம், உந்துகிறதாம், உருளுதாம், உடையுதாம்! இன்னும் தெளிவாகச் சொன்னப்போனால் தன் இரு முதலாளிகளில் பலமான முதலாளியின் இடம் காணாமல் போனவுடன் சொத்தை ஆட்டையைப் போட நினைக்கும் வேலையாளின் சுயநலன் தான் ஓ.பி.எஸ்க்கு இருக்கிறதே தவிர, அதில் கட்சி நலன், அரசு நலன், மக்கள் நலன் இருக்கிறது என நினைப்பது மகா அரசியல் அறிவீனம்.

மக்கள் எதிர்பார்க்க வேண்டியதும், கேட்க வேண்டியதும், குரல் எழுப்ப வேண்டியதும் சசியா, ஓ.பி.எஸ்சா என்பதற்காக அல்ல. இருவரும் மோதகமும், கொழுக்கட்டையும்தான்  உள்ளே உள்ளது எல்லாம் ஒன்றுதான்? கேட்க வேண்டியதும், குரல் எழுப்ப வேண்டியதும் "பொதுத்தேர்தல்" லுக்காக மட்டுமே இதுவே  தற்போதைய நெருக்கடிக்கு தீர்வாக அமையலாம் .

இளைஞர்களே தயாராகுங்கள் தமிழ்நாட்டை நல்வழி நடத்தி செல்வதற்கு...

Saturday 4 February 2017

சுதந்திர தினம் துக்கதினமாக அனுஷ்டிப்பு.

இன்று  04 ஆம் திகதி இலங்கை தனது 69 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது, அனால் இலங்கையில் உள்ள அனைத்து இனமக்களும் சுதந்திரத்தை அனுபவிக்காத நிலையிலேயே இன்றைய சுதந்திரதினமும் கொண்டாடப்படுகிறது. அதாவது ஈழத்தமிழர்களின் உரிமையும் சுதந்திரமும் பறிக்கப்பட்ட கறுப்பு நாளாகவே இது கருதப்பட்டு  வருகிறது .

நாடு சுதந்திரம் அடைந்து 69 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது ஆனால் இலங்கையில் வாழும் இரு பிரதான இனங்களாக கருதப்படும் தமிழ், சிங்கள மக்கள்  ஒன்றுமையுடன் சுதந்திர தினத்தை கொண்டாடும் நிலையை  இதுவரை எந்த அரசும் ஏற்படுத்தவில்லை என்பதை இன்றைய நிரூபித்துள்ளன.ஆட்சிப்பீடம் ஏறிய சிங்கள பௌத்த பேரினவாத அரசுகள் அனைத்தும் ஒரே பேரினவாத கொள்கையை பின்பற்றி 1948 ஆம் ஆண்டு முதல் பல இலட்சம் அப்பாவி தமிழர்களை கொன்றது. மீதமுள்ள மக்களின் வாழ்விடங்கள், வாழ்வாதாரங்களை அழித்து சொந்த மண்ணிலேயே அகதிகளாக இன்றும் அலைய விட்டுள்ளது. இன்று இலங்கைத்தீவில் ஆட்சி மற்றம் ஏற்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்து நல்லாட்சி நடக்கிறது என சர்வதேசத்திற்கு காட்டிக்கொண்டலும் தமிழர்களுக்கு எந்தவித தீர்வையோ, நீதியையோ வழங்கபோவதில்லை. முன்னைய அரசுகளைப் போலவே பௌத்த தர்மத்தை பின்பற்றி எந்தவித தீர்வையும் முன்வைக்காது தமது ஆட்ச்சிக் காலத்தை வெற்றிகரமாக இவ்வரசும் கடந்து செல்லும்.

சுதந்திர தின நிகழ்வுகள் நடைப்பெற்று வரும் நிலையில் முல்லைத்தீவு வர்த்தகர்கள் கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.






கேப்பாப்புலவு மக்கள் தமக்கு சொந்தமான காணிகளில் இருந்து இராணுவத்தை வெளியேற்றி எம்மிடம் மீள கையளிக்குமாறு போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.




மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் தேசிய சுதந்திர தினத்தை தமிழ்தேசிய இனத்தின் துக்க தினமாக அறிவிக்க கோரியும், காணாமல் போன 20 ஆயிரம் பேருக்கு அரசே பதில் சொல், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய், இராணுவம் ஆக்கிரமித்துள்ள நிலங்களை விடுதலை செய், புதிய நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதை தடுத்து நிறுத்து, இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களுக்கான நீதி விராணையை சர்வதேச நீதிபதிகளிடம் ஒப்படை, இனப்பிரச்சினைக்கு சர்வதேச மத்தியஸ்த்ததுடன் தீர்வினை காண், என்ற 6 கோரிக்கைகளை முன்வைத்து இந்த கவனயீர்ப்பு போராட்டம் கறுப்பு பட்டி அணிந்து நடைபெற்று வருகின்றது.

மன்னாரில் மேற்கொள்ளப்படவிருந்த கறுப்புக் கொடிப் போராட்டத்திற்கு மன்னார் நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை தடை உத்தரவை பிறப்பித்திருந்தது. எனினும் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த போராட்டத்திற்கு மன்னார் நீதிமன்றம் தடை கட்டளை பிறப்பித்துள்ள போதும் சட்டத்தை மீறாத வகையில் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளதாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் சுதந்திர தினத்தை அனைத்து இலங்கையரும் கொண்டாட வரும்படி லண்டனில் உள்ள இலங்கை தூதரகம் அழைப்பு விடுத்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று லண்டன் தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இராணுவமே வடக்கை விட்டு வெளியேறு , அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரியும், இலங்கையின் சுதந்திரதின நிகழ்வானது தமிழர்களுக்கான சுதந்திரமல்ல என விடுதலைப்புலிகளின் கொடியினை ஏந்தியவாறு போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

இவ்வாறு தமிழ் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு  அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காது  இன்றுவரை இலங்கையின் சுதந்திரதினம் கொண்டாடப்பட்டு வருகிறதென்பதே உண்மை.