Thursday 23 March 2017

தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கத்துக்கு மேலும் இரண்டு ஆண்டு  கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இக்கால அவகாசத்தால் இலங்கை அரசு மகிழ்வடைந்துள்ளது. இம் மகிழ்வுக்குக் காரணம் இரண்டு வருட கால அவகாசத்தில் ஐக்கிய நாடுகள் பேரவையின் தீர்மானங்களை நிறைவு செய்துவிடுவோம்   என்பதர்க்கல்ல. மாறாக UN தீர்மானங்களை அமுல்படுத்துவதற்காக வழங்கப்பட்ட இக்கால அவகாசத்தை, அத்தீர்மானங்களை பெறுமதியற்றதாக, வலுவற்றதாக, தேவையற்றதாக மாற்றுவதற்குப் பெருந்துணை புரியும் என்பதாலேயாகும்.

UN மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத்தொடரில் வைத்து
இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்கப்படும்போது இணை அனுசரணை என்ற அடிப்படையில், வாக்கெடுப்பு என்பதும் கைவிடப்பட்டது.

எதுவாயினும் 2014 மற்றும் 2015ம் ஆண்டுகளில் இலங்கை விவகாரம் தொடர்பில் UN மனித உரிமைகள் பேரவையால் ஆராயப்பட்ட போது  இருந்த முனைப்பு, ஆர்வம், ஈடுபாடு என்பன 2017ம் ஆண்டில் இருக்கவில்லை என்பதை அவதானிக்க முடியும். காலம் செல்லச்செல்ல குறித்த விடயம் ஆர்வம் குறைந்தோ அல்லது மறக்கப்பட்டுபோவது வழமை, அந்த வழமை எங்கள் விடயத்திலும் நடந்துள்ளதென்பதே உண்மை.

இப்போது கால அவகாசம் குறித்துப் பேசுகின்றவர்களும் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் இதே கரிசனையோடு பேசுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. இரண்டு வருடங்களின் பின்னர் எந்த விடயம் முதன்மையாக இருக்கிறதோ அதன் பக்கமே உலகத்தின் பார்வை இருக்கும்.

இதனால்தான் "ஆறின கஞ்சி பழங்கஞ்சி" என்றொரு பழமொழி நம் தமிழ் மொழியில் வந்தது. எனினும் இவற்றை நம் அரசியல் தலைமை இம்மியும் சிந்திக்கவில்லை. அதற்கும் காரணம் உண்டு.

அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கும் தற்போதைய ஆட்சியாளர்களுக்கும் இடையில் மிக நெருக்கமான உறவு உண்டு. இதனடிப்படையில் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதில் கூட்டமைப்பின் தலைமை மிகவும் உறுதியாக, இறுக்கமாக நின்றது.நாங்கள் சொல்வது தான் தமிழ் மக்கள் சொல்வது, தமிழ் மக்கள் சொல்வதுதான் நாங்கள் சொல்வது என்றவாறு கூட்டமைப்பின் தலைமை கூறி வருகிறது.

ஆனால் கால அவகாசம் என்ற விடயத்தில், போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் கருத்தை கண்டறிந்து அதன்படியே UN மனித உரிமை ஆணையம் தீர்மானத்தை எடுத்திருக்க வேண்டும். குற்றம் இழைத்த தரப்பு கால அவகாசம் கேட்கிறது. அக் கால அவகாசத்தைக் கொடுப்பதா? இல்லையா? என்பதைத் தீர்மானிப்பதற்கு, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் அபிப்பிராயத்தைக் கேட்பது நீதியல்லவா?

இருந்தும் மனித உரிமைகள் பேரவை கூட ஈழத் தமிழ் மக்களின் விடயத்தில் ஏனோ தானோ என்று நடந்து வருகிறது என்பதே உண்மை.

எது எவ்வாறாயினும் போரினால் பாதிக்கப் பட்ட தமிழ் மக்களின் மனநிலையை அறியாமல் இலங்கை அரசுக்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்குவதென்பது, இதுதான் உலகம் என்ற மகா தத்துவத்தை உணர வைத்துள்ளது. அவ்வளவுதான். 

Friday 3 March 2017

பிரித்தானியப் பிரதமர் திரேசா மேயிடம் மனு கையளிக்கப்பட்டது.

தமிழ் மக்களின் சமகால கோரிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபையிடம் முன்வைக்கும் முகமாக 6 அம்சக் கோரிக்கைகளுடன் கூடிய மனு ஒன்று  பிரித்தானியப் பிரதமர் திரேசா மேயிடம் கையளிக்கப்பட்டது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் பிரித்தானிய வாழ் தமிழர்களால் முன்னெடுத்து வரப்படும் காலவரையறையற்ற தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தின் 5 ஆவது நாளான நேற்றைய தினம் மேற்படி மனு கையளிக்கப்பட்டுள்ளது.


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 34ஆவது அமர்வு ஜெனிவாவில் நடைபெற்று வரும் நிலையில் இலங்கைக்கு ஐ.நா. மேலும் காலநீடிப்பு வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்தியும் தமிழ் மக்களின் சமகால கோரிகக்கைகளை முன்னிறுத்தியும் பிரித்தானியாவில் காலவரையறையற்ற மாபெரும் தொடர் உணவு தவிர்ப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றமை யாவரும் அறிந்ததே.


கடந்த 28ஆம் திகதி ஜெனிவாவில் ஐ.நா.வின் 34ஆவது அமர்வு ஆரம்பமான நிலையில் அதற்கு முதல் நாளான 27ஆம் திகதி முதல் வெஸ்மினிஸ்டர் நகரில் அமைந்துள்ள பிரித்தானிய பிரதமரின் வாசல்ஸ்தலத்திற்கு முன்பாக 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மேற்படி அகிம்சைவழிப் போராட்டம் நடைபெற்று வருகின்றது.


இந்நிலையிலேய தொடர் போராட்டத்தின் 5 ஆவது நாளான நேற்றைய தினம் (2.3.2017) 6 அம்சக் கோரிக்கைகளுடன் கூடிய மனுவை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர் இராசலிங்கம் திருக்குமரன் மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகள் அமைச்சர் மணிவண்ணன் பத்மநாதன் ஆகியோர் பிரத்தானிய பிரதமரின் வாசல்ஸ்தலத்தில் கையளித்துள்ளனர்.


Wednesday 1 March 2017

PLEASE SUPPORT HUNGER STRIKE PROTEST - மாபெரும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம்

PLEASE SUPPORT HUNGER STRIKE PROTEST  DAY 4 -01/03/2017

Mega Fasting Protest in front of 10 Downing Street from Sunday (26.02.2017)

In support of our people protests in Tamil Eelam & demand the UN not to extend the time for Sri Lanka on implementation of resolution 30/1 and Justice, Peace and permanent solution (Tamil Eelam) for Tamils.

TGTE have organised a Mega Fasting Protest in front of 10 Downing Street during the 34th Session of UNHRC.

Location:
In front of 10 Downing Street,
London, UK, SW1A 2AA

Nearest Underground Station: Westminster
This hunger strike is Organised & Supported by TGTE & Other Organisations

Please pass this message to your friends and family
.